விஜய் சேதுபதியின் லாபம் தியேட்டரில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ தேதி வெளியானது!
சென்னை : புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த லாபம் ரிலீஸ் செய்ய தயாராக உள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து இருக்க வழக்கமான எஸ்பி ஜனநாதன் திரைப்படங்களை போலவே சமூக அரசியலை ஆணித்தனமாக பேசும் லாபம் திரைப்படத்தில் கலையரசன், டேனியல் ஆனி, சாய் தன்சிகா, ரமேஷ் திலக்,ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லாக்டவுன் காரணமாக தாமதமான படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் விறுவிறு வேகத்தில் டப்பிங்கை முடித்த படக்குழு இப்பொழுது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சமூக அரசியலை
தமிழ் சினிமாவில் வெகு சில இயக்குனர்கள் மட்டுமே சமூக அரசியலை ஆணித்தனமாக கூறிவருகின்றனர் . அந்தவகையில் எஸ்பி ஜனநாதன் முதல் படத்திலிருந்தே சமூக அரசியலையும் விவசாயம் எவ்வாறு கார்ப்பரேட் கம்பெனிகளால் சுரண்டப்படுகிறது. மக்களின் உழைப்பை கார்ப்பரேட்டுகள் எவ்வாறு கொள்ளை அடிக்கிறது என்பதை தனது ஒவ்வொரு படங்களிலும் கூறிவருகிறார். அந்த வகையில் வெளியான பேராண்மை, ஈ,புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து இப்பொழுது விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தையும் எஸ்பி ஜனநாதன் இயக்கியுள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த வேடம் கொடுத்தாலும் அதை தனது இயல்பான நடிப்பின் மூலம் அசத்தக் கூடிய விஜய் சேதுபதியின் நடிப்புக்கு இந்திய அளவில் ரசிகர்களால் மிகப் பெரிய வரவேற்பு இருக்க தமிழில் இவர் நடிக்கும் பல திரைப்படங்களிலும் வேற்று மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டும் ரீமேக் செய்யப்பட்டும் வருகிறது. அந்த வகையில் தமிழில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் எந்த அளவிற்கு வெற்றி பெற்றது என்பதை சொல்லித் தெரிய தேவையில்லை இப்பொழுது விக்ரம் வேதா ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது தமிழில் இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி இந்த திரைப்படத்தை ஹிந்தியிலும் இயக்க உள்ளனர். ஹிரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலிகான் இதில் லீட் ரோலில் நடிக்கின்றனர் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

100 கோடியை தாண்டி
தமிழைத் தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்துறையிலும் விஜய் சேதுபதிக்கு பெரிய மார்க்கெட் இருப்பதோடு ரசிகர்கள் மத்தியில் அளவுகடந்த அன்பும் உள்ளது. அதனாலேயே இவரை தெலுங்கு படங்களில் காண ஆவலுடன் உள்ளனர். சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டிக்கு பிறகு ஹீரோவாக நடிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த தெலுங்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் அளவிற்கு உப்பென்னா திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து பட்டைய கிளப்பி இருந்தார். லீட் ரோலில் புதுமுக நடிகர்கள் நடித்திருந்தால் உப்பென்னா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்காகவே படம் சக்கை போடு போட்டு 100 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. இவ்வாறு தமிழைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் விஜய் சேதுபதிக்கு மலையாளம் மற்றும் ஹிந்தி மொழியிலும் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல்
நானும் ரவுடிதான் வெற்றிக்கு பிறகு விக்னேஷ் விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். காதல் படங்களயே மிகவும் வித்தியாசமாக இப்போதுள்ள இளைய தலை முறைக்கு ஏற்றவாறு ட்ரெண்டாக இயக்கக்கூடிய விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தாவை நடிக்க வைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாராவுடன் ஒன்றாக இணைந்து பஸ் படிக்கட்டில் ஃபுட்போர்டு அடித்தவாறு வலம் வந்த வீடியோ செம ரொமான்டிக் காட்சி வைரல் ஆனது. இதை பார்த்த ரசிகர்களும் வளையோசை கலகலகல பாடலை இந்தக் காட்சியுடன் இணைத்து ரசித்து பார்த்தனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு இப்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

செப்டம்பர் 9 தேதி ரிலீஸ்
மற்ற ஹீரோக்களுக்காவது ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்கள் தான் ரிலீசுக்கு தயாராக இருக்கும் ஆனால் விஜய் சேதுபதிக்கோ டஜன் கணக்கில் திரைப் படங்கள் வெளியாக காத்துக் கொண்டிருக்க ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லாபம் திரைப்படம் லாக்டவுனுக்கு முன்பே முடிக்கப்பட இருந்தது ஆனால் கொரோனா பரவல் காரணமாக திருத்தப்பட்ட படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டு இதர இருக்கும் காட்சிகளையும் எடுத்து விட்டு படக்குழு விறுவிறுப்பாக டப்பிங் பணிகளையும் முடித்து வந்தது. இதற்கிடையில் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் திடீரென மறைந்தார். இதனால் லாபம் படத்தின் இதர பணிகளை படக்குழு முடித்து இப்போது படத்தை ரிலீஸ் செய்ய தயாராக உள்ளனர். திரையரங்குகள் மூடப்பட்டதால் லாபம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்ற தகவல் அரசல்புரசலாக வெளிவந்தது ஆனால் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து லாபம் பண்டிகை நாளில் ரிலீஸ் ஆகிறது. அந்த வகையில் வரும் செப்டம்பர் மாதம் 9 தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லாபம் திரைப்படம் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











