கோவில்கள் குறித்த ஜோதிகா பேச்சுக்கு ஆதரவா? வைரலான போஸ்ட்.. பதறிப்போய் விளக்கம் தந்த விஜய் சேதுபதி!

சென்னை: கோவில்கள் குறித்து நடிகை ஜோதிகா பேசியதற்கு தான் ஆதரவு தெரிவித்ததாக வைரலாகும் போஸ்ட் போலியானது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Jothika பேசியதில் தவறில்லை Vijay sethupathi Supports with Tweet

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் பல விஷயங்களை துணிச்சலாக பேசி வருகிறார்.

நடிகர் விஜய் தன்னை மதமாற்றம் செய்ததாக வெளியான தகவலை அறிந்த விஜய் சேதுபதி, போய் வேலைய பாருங்கடா என காட்டமாக டிவிட்டியிருந்தார். அவரது இந்த பதிலால் பெரும்பாலான அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

மனிதன்தான் வருவான்

மனிதன்தான் வருவான்

அண்மையில் நடைபெற்ற மாஸ்டர் ஆடியோ லாஞ்ச் விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி, கொரோனாவில் இருந்து காப்பாற்ற கடவுள் வரமாட்டார் என்ற ரிதீயில் பேசினார். கொரோனாவை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். மனிதனைக் காப்பாற்ற மனிதன் தான் வருவான், மேலிருந்து ஒன்றும் வராது என கடவுள் நம்பிக்கையுள்ளவர்களை சாடும் வகையில் பேசியிருந்தார்.

செலவு தேவையா?

செலவு தேவையா?

அவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒன்றாக எழுந்தது. இந்நிலையில் நடிகை ஜோதிகா விருது விழா ஒன்றில் தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். தஞ்சை அரசு மருத்துவமனை சரியாக பராமரிக்கப்படவில்லை என்ற அவர், தஞ்சை பெரிய கோவிலை பராமரிக்க இவ்வளவு செலவு தேவையா என்பது போல் பேசியிருந்தார்.

பள்ளிக்கு கொடுங்கள்

பள்ளிக்கு கொடுங்கள்

மேலும் கோவில்களுக்கு பெயிண்ட் அடிக்க செய்யும் செலவு, அவற்றை பராமரிக்க ஆகும் செலவு மற்றும் கோவில் உண்டியல்களில் போடும் காணிக்கையை பள்ளிக்கூடம் கட்ட கொடுங்கள் என்று கூறினார். அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ர்ப்பு கிளம்பியுள்ளது.

ஜோதிகாவுக்கு எதிர்ப்பு

ஜோதிகாவுக்கு எதிர்ப்பு

ஏன் சர்ச் மற்றும் மசூதிகளை பற்றி பேச வேண்டியதுதானே, கோவில்களை பற்றி மட்டும் ஏன் பேசுகிறீர்கள் என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ஜோதிகாவின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சில திரை பிரபலங்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முதல் ஆளாக இருப்பேன்

முதல் ஆளாக இருப்பேன்

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை ஜோதிகா பேசியதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக ஒரு போட்டோ வைரலானது. அதில் ஜோதிகாவின் துணிவான பேச்சுக்கு பாராட்டுக்கள், அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன்.

விஜய் சேதுபதி விளக்கம்

விஜய் சேதுபதி விளக்கம்

மனிதனை மனிதன் தான் காப்பாற்ற முடியும் கடவுளால் வேடிக்கை பார்க்கத்தான் முடியும். கோவில்கள் மருத்துவமனையாக மாறும் காலம் நெருங்கிவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு வைரலான நிலையில் அதன் மீது கிராஸ் போட்டு அந்த பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள விஜய் சேதுபதி அதனை ஃபேக் என குறிப்பிட்டுள்ளார்.

கத்துக்கணும்..

கத்துக்கணும்..

விஜய் சேதுபதியின் இந்த விளக்கத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரது பக்கத்தில் பல விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். அதன்படி, அண்ணன் பல மேடைகளில் பல கருத்துகளை பல விதமாக தெரிவிப்பதனால் அண்ணனை தவறாக புரிந்துகொண்டுள்ள எவனோ இப்படி ஒரு பதிவு பதிவிடப்பட்டுள்ளது.
கத்துக்கணும்..என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

மனது புண்பட்டுள்ளது

மனது புண்பட்டுள்ளது

கோவில்கள் மருத்துவமனையாக மாறும் காலம் நெருங்கி விட்டது.. என்று இடம்பெற்றிருந்ததை பார்த்த இந்த நெட்டிசன், டேய் இது மெர்சல்ல வர்ற சீன் டா என கலாய்த்துள்ளனர். மற்றொரு நெட்டிசனான இவர், மதம் அனைவருக்கும் பொதுவானது ஒரு மதத்தை மட்டும் நக்கலாகவும் தவறாக பேசுவது கண்டிக்க தக்கது நீங்கள் ஜோதிகா பேசியதை கண்டிக்கணும் நிச்சயமாக எங்களின் மனது புண்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X