Actor Vijay Sethupathi: தனிமையிலே இனிமை காணும் நடிகர் விஜய் சேதுபதி.. என்ன ஆச்சு?
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஜனவரியில் கத்ரீனா கைப்ஃபுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்திருந்த மெர்ரி கிறிஸ்மஸ் படம் வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தமிழிலும் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா விரைவில் ரிலீசாக உள்ளது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் விஜய் சேதுபதி.
அடுத்தடுத்து தன்னுடைய படங்களின் அப்டேட்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளதுடன் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி பல ஆண்டுகளைக் கடந்து தன்னை தொடர்ந்து ஹீரோவாக, வில்லனாக, கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக பல பரிணாமங்களில் வெளிப்படுத்தி வருகிறார். ஹீரோ என்ற இமேஜிற்குள் சிக்கிக் கொள்ளாமல் ரஜினி, கமல், விஜய் என முன்னணி ஹீரோகளுக்கு வில்லனாக அதிரடி சரவெடியாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டுமில்லாமல் தற்போது இந்தியிலும் விஜய் சேதுபதியை அடுத்தடுத்த படங்களில் பார்க்க முடிகிறது. கடந்த ஜனவரியில் கத்ரீனா கைஃப்புடன் விஜய் சேதுபதி நடித்திருந்த மெர்ரி கிறிஸ்மஸ் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமானது.
அடுத்தடுத்த படங்கள்: அடுத்தடுத்த படங்களில் தன்னை பிசியாக்கி கொண்டுள்ளார் விஜய் சேதுபதி. அடுத்ததாக விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் இந்த படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆயினும் அடுத்தடுத்த படங்களில் தன்னை பிசியாக்கிக் கொண்டுள்ளார் விஜய் சேதுபதி. அடுத்ததாக விடுதலை 2 படத்திலும் விஜய் சேதுபதி வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து இந்த ஆண்டிலேயே படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் பிஸியாக காணப்படுகிறார் விஜய் சேதுபதி.
இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படம்: தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் அவர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் சூரிய அஸ்தமனத்தை அவர் தனியாக என்ஜாய் செய்வதாக காணப்படுகிறது. இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தொடர்ந்து லைக் கொடுத்து வருகின்றனர். மேலும் தனிமையில் இனிமை காண முயற்சிப்பது எதனால் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரிலீசுக்கு தயாராகும் VJS51 படம்: இதனிடையே விஜய் சேதுபதியின் 51வது படத்தின் சூட்டிங்கும் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தை ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் இணைந்திருந்த இயக்குநர் ஆறுமுகக்குமார் இயக்கியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள சூழலில் அடுத்தடுத்து படத்தின் டைட்டில், டீசர் உள்ளிட்டவை வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications