Vijay sethupathi: விஜய் சேதுபதி கற்கத் துவங்கிய புது விஷயம்.. மனுஷன் சும்மாவே இருக்க மாட்டேங்கறாரே!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து முன்னணி மற்றும் இளம் இயக்குநர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் கதைக்கு மற்றும் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்த வருகிறார். அந்த வகையில் கடந்த 14ம் தேதி விஜய் சேதுபதியின் மகாராஜா படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்தப் படம் விஜய் சேதுபதியின் 50வது படமாக அமைந்துள்ளது. மிகப் பெரிய அளவில் மகாராஜா படத்திற்காக ப்ரோமோஷன்களில் விஜய் சேதுபதி ஈடுபட்டார். விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றதை பார்க்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் அவருடன் நட்டி நடராஜ், அபிராமி உள்ளிட்ட படக்குழுவினரும் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த 14ம் தேதி அவரது நடிப்பில் வெளியானது மகாராஜா படம். இந்த படம் அவரது 50வது படமாக அமைந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இந்த படம் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் சிறப்பாகவே பூர்த்தி செய்து வருகிறது. படத்தின் வாரயிறுதி கலெக்ஷனே 32 கோடிகளை தாண்டியுள்ளது. தொடர்ந்து வார நாட்களிலும் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடி வருகிறது. முன்னதாக இந்த படத்திற்காக அதிகமான புரொமோஷன்களில் விஜய் சேதுபதி தொடர்ந்து ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.
பிரமோஷன்களில் விஜய் சேதுபதி: இதையடுத்து தன்னுடைய மகன் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள பீனிக்ஸ் படத்தின் டீசர் வெளியீட்டிலும் விஜய் சேதுபதி கலந்து கொண்டதை பார்க்க முடிந்தது. முன்னதாக விஜய் டிவி குக் வித் கோமாளி மற்றும் ஸ்டார்ட் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகளிலும் விஜய் சேதுபதி பங்கேற்று சிறப்பாக செயல்பட்டிருந்தார். இந்த இரு நிகழ்ச்சிகளில் விஜய் சேதுபதியுடன் மகாராஜா படக் குழுவினர் நட்ராஜ், அபிராமி மணிகண்டன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். இதில் பிரியங்கா தொகுத்து வழங்கிய ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியிடம் பல விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இசை கற்கும் விஜய் சேதுபதி: அப்போது உடனிருந்த நடிகர் நட்டி நடராஜ் விஜய் சேதுபதி தற்போது இசை கற்றுக்கொண்டு வருவதாக ரகசியத்தை வெளிப்படுத்தினார். இதை ஒப்புக்கொண்டு விஜய் சேதுபதியும் பேசினார். தான் தற்போது தான் இசையை கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த பல விஷயங்களை கற்றுத் தேற வேண்டும் என்ற ஆர்வத்துடன் விஜய் சேதுபதி இந்த வயதிலும் இசை கற்றுக் கொள்ள துவங்கியுள்ளார். சினிமாவில் நடிக்க துவங்குவதற்கு முன்னதாக விஜய் சேதுபதியின் வாழ்க்கை அவ்வளவு இனிதாக இருந்திருக்கவில்லை. மாறாக வெளிநாட்டில் வேலை கிடைப்பதற்காக மிகுந்த போராட்டத்துடன் செயல்பட்டு இருந்துள்ளார்.
வாழ்க்கை போராட்டம்: துபாயில் அக்கவுண்ட்ஸ் வேலை கிடைத்த நிலையில் விஜய் சேதுபதிக்கு சரியான சம்பளம் இல்லாத காரணத்தால் மீண்டும் நாடு திரும்பி, நடிக்க சான்ஸ் தேடியதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். பெண் என்ற சீரியலில் சீதா உள்ளிட்டவர்கள் நடித்த நிலையில் அவர்களுடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்ததாக தெரிவித்துள்ளார். அவரது வாழ்க்கை போராட்டம், வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற படிப்பிணையை விஜய் சேதுபதிக்கு கொடுத்துள்ளது. தயாரிப்பாளராக தான் சிறப்பாக செயல்படவில்லை என்றும் விஜய் சேதுபதி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இத்தகைய அனுபவங்கள் அவருக்கு அடுத்தடுத்த விஷயங்களை கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











