Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!

சென்னை: இன்றைய தினம் மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்த வாக்குப்பதிவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் திரளாக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி உள்ளிட்டவர்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். நடிகர் அஜித் முதல் ஆளாக காலை 7 மணியளவிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். நடிகர் விஜய்யும் மாஸ்கோவிலிருந்து நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவு செய்தார்.

Actor Vijay Sethupathi took selfie with old lady who came to cast her vote in Wheel chair

மக்களவை தேர்தல் 2024: மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வரும் ஜூன் 1ம் தேதிவரை அடுத்தடுத்த கட்டங்களில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் இன்றைய தினம் தேர்தல் ஒரேகட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் திரைத்துறை பிரபலங்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் திரளாக கலந்துக் கொண்டு வாக்களித்ததை பார்க்க முடிந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி உள்ளிட்டவர்கள் இந்த தேர்தலையொட்டி தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

நடிகர்கள் வாக்குப்பதிவு: நடிகர் அஜித் காலை 7 மணியளவிலேயே முதல் ஆளாக சென்று தன்னுடைய வாக்கினை பதிவு செய்த நிலையில், மாஸ்கோவில் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு இன்று காலை சென்னை திரும்பிய நடிகர் விஜய், நேரடியாக நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். விஜய் சேதுபதி, சூர்யா, தனுஷ் உள்ளிட்டவர்களும் காலையிலேயே தங்களது வாக்கினை பதிவு செய்தனர். நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி ஆர்த்தியுடன் வந்து வாக்குப்பதிவு செய்தார். முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு அவர் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டார்.

மூதாட்டியுடன் விஜய் சேதுபதி செல்ஃபி: இதனிடையே நடிகர் விஜய் சேதுபதியும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். தொடர்ந்து தன்னுடைய வாக்குச்சாவடிக்கு வீல் சேரில் வந்த மூதாட்டியை பாராட்டி அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். இளம் வயதினரே வெயில், கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் வாக்களிப்பதை தவிர்க்கும் நிலையில், வீல் சேரில் வந்தாவது வாக்களிக்க வேண்டும் என்ற அந்த மூதாட்டியின் செயல்பாடு இம்ப்ரஸ் செய்ததையடுத்து விஜய் சேதுபதி செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

எளிமையான விஜய் சேதுபதி: மிகவும் எளிமையான உடையணிந்து வாக்குச்சாவடிக்கு வந்த விஜய் சேதுபதியின் எளிமை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தன்னுடைய படங்களை போலவே எந்தவிதமான கொள்கையிலும் சிக்கிக் கொள்ளாமல் தன்னை தொடர்ந்து எளிமையாகவே வைத்து வருகிறார் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன், கேரக்டர் ரோல்களிலும் இவரை பார்க்க முடிகிறது. ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் ஷாருக்கானுக்கு வில்லனாகிவிட்டார். தொடர்ந்து சில காலங்களுக்கு வில்லன் கேரக்டர்களை ஏற்க போவதில்லை என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X