Actor Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் 50வது படம்.. மகாராஜா ரிலீஸ் எப்ப தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து வருகின்றன. ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் தனக்கு கிடைக்கும் எந்தவிதமான கேரக்டரையும் சிறப்பாக கொடுக்கும் நடிகராக விஜய் சேதுபதி காணப்படுகிறார். ஹீரோ மட்டுமில்லாமல் வில்லன், கேரக்டர் ரோல்கள் என பல்வேறு கேரக்டர்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி, திருநங்கையாகவும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததை பார்க்க முடிந்தது.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் மெர்ரி கிறிஸ்மஸ் படம் தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படம் தற்போது ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படம் வரும் மே மாதம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Actor Vijay sethupathi s 50th movie Maharaja to release on May month it seems

நடிகர் விஜய் சேதுபதி: ஹீரோயிசத்தில் மட்டுமே சிக்கிக் கொள்ளாமல் ஹீரோ, கேரக்டர் ரோல், வில்லன் என அடுத்தடுத்து தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்திய அளவில் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருபவர் விஜய் சேதுபதி. இவரது அடுத்தடுத்த படங்கள் குறைந்த இடைவெளிகளில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சூழலில், தற்போது இவரது ஐம்பதாவது படம் மகாராஜா ரிலீசுக்கு தயாராகியுள்ளது. கடந்த ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் பாலிவுட்டில் உருவான ஜவான் மற்றும் இந்த ஆண்டு துவக்கத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியான மெர்ரி கிறிஸ்மஸ் போன்ற படங்கள் அடுத்தடுத்து அவருக்கு சிறப்பாக கை கொடுத்துள்ளன.

விஜய் சேதுபதி 50வது படம்:இந்நிலையில் அவரது 50வது படம் மகாராஜா ரிலீசுக்கு தயாராகியுள்ளது. பெரிய இயக்குனர்கள் கூட்டணியில் மட்டும் என்றில்லாமல் இளம் இயக்குனர்களுடனும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. அந்த வகையில் மகாராஜா படம் முன்னதாக குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், முனிஸ் காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர் ஏஎல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மகாராஜா படம்: இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள சூழலில் வரும் மே மாதம் 16ம் தேதி இந்த படம் ரிலீசாகவுள்ளதாக தற்போது படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பித்த இந்த படத்தின் சூட்டிங், தொடர்ந்து நடந்த சூழலில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். கையில் ரத்தம் தோய்ந்த அரிவாளுடன் சலூன் நாற்காலியில் விஜய் சேதுபதி அமர்ந்திருக்கும் படியான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்தடுத்த படங்கள்: கடந்த ஜனவரி மாதத்தில் வெளியான விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் படம் சிறப்பான வரவேற்பை பெற்று ஓடிடியிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிகரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள மகாராஜா படம், மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்த படத்தில் மிகவும் இயல்பான கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தென்னிந்திய அளவில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அந்த வகையில் ஒரு ஆண்டில் 7 -8 படங்கள் அவரது நடிப்பில் வெளியாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X