Vijay Sethupathi: சத்தியமா பொய்.. சுவாரஸ்யமான தலைப்பில் VJS51 படம்.. ரிலீஸ் அப்டேட் இதோ!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் சுவாரஸ்யங்களை கூட்டுவதாக அமைந்து வருகின்றன. இவருக்கு மட்டும் எந்த கேரக்டரும் பொருந்துவது எப்படி என்று பட்டிமன்றம் வைக்காத குறையாக விமர்சகர்கள், ரசிகர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான ஜவான் படத்தில் வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி, இந்த ஆண்டு துவக்கத்திலேயே பொங்கல் வெளியீடாக ரிலீசான மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திலும் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளார். அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் நடித்துள்ளதால், விரைவில் மும்பையிலேயே செட்டில் ஆக விஜய் சேதுபதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் 51வது படமாக உருவாகிவந்த VJS51 படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ள நிலையில் 7சிஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். முன்னதாக ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஆறுமுக குமார் கூட்டணி இணைந்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இடைவெளி இல்லாமல் நடித்து வருகிறார். வில்லன், கேரக்டர் ரோல்கள், ஹீரோ என எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைத்து கேரக்டர்களிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டில் பாலிவுட்டில் விஜய் சேதுபதி நடித்திருந்த ஜவான் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 1000 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது. ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளியான இந்தப் படம் விஜய் சேதுபதிக்கும் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.
மெர்ரி கிறிஸ்துமஸ் படம்: இந்நிலையில் கத்ரினா கையிப்புடன் விஜய் சேதுபதி நடித்து கடந்த ஜனவரி 12ம் தேதி மெர்ரி கிறிஸ்துமஸ் படம் வெளியானது. தமிழ் மற்றும் இந்தியில் வெளியான இந்தப் படமும் விஜய் சேதுபதிக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. திரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா ஜோடியின் கெமிஸ்ட்ரியும் வரவேற்பை பெற்றது. இந்தப் படங்களை தொடர்ந்து பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் விஜய் சேதுபதி நடிப்பார் என்றும் மும்பையிலேயே அவர் செட்டில் ஆகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

VJS51 படத்தின் டைட்டில்: அடுத்ததாக அவரது VJS51 படத்தின் சூட்டிங் சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் இணைந்திருந்த விஜய் சேதுபதி -இயக்குநர் ஆறுமுக குமார் கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. படத்திற்கு சத்தியமா பொய் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்த விஜய் சேதுபதி, டைட்டில் குறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்றும் கூறியிருந்தார்.
ஆக்ஷன் காமெடி கதைக்களம்: படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். படம் காதல், காமெடி, ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாகவும் ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது தமிழில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா படத்திலும் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படத்திலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. முன்னதாக மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் கேமியோ கேரக்டரிலும் விஜய் சேதுபதி, ஆன்டிரியாவுடன் இணைந்து நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











