Actor Vijay: மாற்றுத் திறனாளியுடன் கைக்குலுக்கிய விஜய்.. ட்ரெண்டாகும் வீடியோ!

திருவனந்தபுரம்: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகின்றன. விஜய்யின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலை குவிக்க தவறுவதில்லை, இந்நிலையில் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய் அறிவித்துள்ளார். இதையடுத்து தற்போது நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் மற்றும் தளபதி 69 படத்துடன் தான் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் விஜய்யின் அரசியல் பிரவேசம் அவர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

தற்போது GOAT படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இதையொட்டி கேரள ரசிகர்கள் விஜய்யை அதிகமான அளவில் சூட்டிங் ஸ்பாட் மற்றும் அவர் தங்கியுள்ள ஹோட்டலில் சந்தித்து தங்களது உற்சாகத்தை பகிர்ந்து வருகின்றனர். குழந்தையின் முத்தத்தை வாங்கிய விஜய்யின் வீடியோ நேற்றைய வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் மாற்றுத்திறனாளி இளைஞருடன் விஜய் கைகுலுக்கிய வீடியோ தற்போது வெளியாகி ஏராளமான ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. வரும் 22ம் தேதியுடன் திருவனந்தபுரத்தில் நடைபெற்றுவரும் ஷூட்டிங் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

Actor Vijay shake hands with Physically challenged person in Kerala

நடிகர் விஜய்: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திj கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் சென்னை, பாங்காக உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்து தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் பிரபுதேவா உள்ளிட்ட நடிகர்கள் இணைந்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் துவங்கிய நிலையில் வரும் 22ம் தேதி வரை படத்தின் சூட்டிங் தொடர்ந்து கிரீன் பீல்ட் மைதானம் உள்ளிட்ட இடங்களில் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

GOAT படத்தின் சூட்டிங்: முன்னதாக சென்னையில் பாடல் காட்சிகள், யோகி பாபுவின் காட்சிகள் உள்ளிட்டவற்றை வெங்கட் பிரபு படமாக்கி இருந்தார். இந்நிலையில் 22ம் தேதியுடன் திருவனந்தபுரத்தில் சூட்டிங்கை நிறைவு செய்யும் GOAT படக்குழுவினர், அடுத்ததாக ஏப்ரல் முதல் வாரத்தில் மாஸ்கோ செல்ல திட்டமிட்டுள்ளனர். அங்கு இரு வாரங்களுக்கு இந்த;ப்படத்தின் சூட்டிங் நடக்க உள்ளதாகவும் தொடர்ந்து அடுத்த மாதத்திற்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் வெறித்தனமான ரசிகர்கள் அதிகமாக காணப்படுகின்றனர்.

ரசிகர்களை சந்திக்கும் விஜய்: அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சூட்டிங்கிற்காக கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு விமான மூலம் சென்ற விஜய்யை ஏராளமான ரசிகர்கள் காத்திருந்து உற்சாகமான வரவேற்பை கொடுத்தனர். தொடர்ந்து சூட்டிங் ஸ்பாட் மற்றும் விஜய் தங்கி உள்ள ஹோட்டல் ஆகிய இடங்களில் அவரை காத்திருந்து சந்தித்து வருகின்றனர். நேற்றைய தினம் குழந்தை ஒன்றை கையில் எடுத்து முத்தம் பெற்ற விஜய்யின் வீடியோ வைரலானது. இந்நிலையில் இன்றைய தினம் அவரது ஹோட்டலில் காத்திருந்து மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் விஜய்யை சந்தித்து மகிழ்ந்தார்.

மாற்றுத்திறனாளியுடன் விஜய் சந்திப்பு: அவர் தன்னுடைய பெற்றோருடன் விஜயை பார்க்க காத்திருந்த நிலையில் அவருடன் கைகுலுக்கி விஜய் தன்னுடைய உற்சாகத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அவருடன் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. விஜய்யின் GOAT படம் கிரீன் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் முன்னதாக விஜய்யின் வருகையையொட்டி அந்த இடத்தில் அவரது பேனர்கள் மற்றும் அவரது அரசியல் கட்சியின் பேனர்கள் ஆகியவற்றை கேரள ரசிகர்கள் வைத்து அவரது சினிமா மற்றும் அரசியலுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

தளபதி 69 படம்: விஜய்யும் தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றாமல் தொடர்ந்து சூட்டிங்கின்போது கிடைக்கும் இடைவெளிகளில் அவர்களை சந்தித்து உற்சாகத்தை அளித்து வருகிறார். இன்னும் இரு தினங்களே விஜய், ஷூட்டிங்கிற்காக கேரளாவில் இருக்கும் நிலையில் தொடர்ந்து ரசிகர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து தளபதி 69 படத்திலும் இணைய உள்ளார் விஜய். இந்த படத்தின் அறிவிப்பு அடுத்த மாதத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்திற்கு ஹெச் வினோத், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல இயக்குநர்கள் சாய்சாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X