சென்னையில் சர்கார் ஷூட்டிங்…! ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடிய விஜய்!

சென்னை: விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

விஜய் திரைப்பட ஷூட்டிங் என்றாலே ரசிகர்களின் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் இப்போது சர்கார் திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரலாகிவருகிறது.

Actor Vijay surrounded by fans at Sarkar shooting!

விஜய் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62வது திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு மகிழ்ச்சி கரகோஷமிட்டனர். ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடி போனார் விஜய்.அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

சர்கார் திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார், ஆளப்போறான் தமிழன் பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் பாடல் எழுதுகிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தை சன்பிச்சர்ஸ் தயாரிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X