Actor Vijay: உங்களை நம்பித்தான் இறங்கியிருக்கேன்.. இணையத்தை கலக்கும் விஜய் வீடியோ!
சென்னை: நடிகர் விஜய் அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் இணைந்து நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் மார்ச் இறுதியில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்துள்ள விஜய், 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அடுத்ததாக கமிட்டாகியுள்ள தளபதி 69 படத்தை நடித்து முடித்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
சிறுவனாக திரைப்படங்களில் நடிக்கத் துவங்கிய விஜய்யின் திரைப்பயணம் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அடுத்தடுத்து ரசிகர்களை கவரும் வகையில் படங்களை கொடுத்து வருகிறார் விஜய். இவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சிறப்பாக அமைந்து வருகிறது. இவருக்கு ஒரு படத்திற்கு ஏறக்குறைய 200 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டுமே வாரிசு மற்றும் லியோ என இரு படங்களில் நடித்துள்ளார் விஜய். இந்நிலையில் முன்னணியில் இருக்கும் இவர் நடிப்பை விடுவதாக எடுத்துள்ள முடிவு கவனத்தை பெற்றுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் அடுத்தடுத்து சிறப்பான ரசிகர்களை கவரும் வகையிலான படங்களை கொடுத்து வருகிறார். தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் சிறுவனாக நடித்து தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கிய விஜய், தற்போது சினிமாவில் 40 ஆண்டுகளை கடந்துள்ளார். ஹீரோவாகவும் 30 ஆண்டுகளை கடந்து இவரது திரைப்பயணம் தொடர்ந்து வருகிறது. இது மட்டுமில்லாமல் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தேவையான சேவைகளையும் கொடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.
விஜய் அரசியல் என்ட்ரி: மேலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த ஆண்டில் மட்டுமே விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் லியோ என அடுத்தடுத்த படங்கள் வெளியாகின. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்,டிங் சென்னை, பாண்டிசேரி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்துவரும் நிலையில், தினந்தோறும் விஜய்யை சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் சந்தித்து வருகின்றனர். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகின்றன.
ட்ரெண்டிங்கில் விஜய்: சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளார் விஜய். அவரது The greatest of all time படமும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளன. இதனிடையே அவர் பீஸ்ட் படத்தில் பேசிய வசனத்தை தற்போதைய சூழலுக்கேற்ப ரசிகர்கள் எடிட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதில் உங்களை நம்பித்தான் இறங்கியிருக்கேன் என்றும் நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் கூறும் வசனங்கள் தற்போதைய சூழலுக்கேற்ப அமைந்துள்ளது. நம்ம ஒன்று செய்யனும்னு நினைக்கிறோம் என்றும் அவர் கூறுவதாக இந்த வீடியோவில் காணப்படுகிறது.
தளபதி 69 படம்: விஜய்யின் The greatest of all time படம் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் சூட்டிங்கும் உடனடியாக துவங்கவுள்ளது. தன்னுடைய அரசியல் வேலைகள் பாதிக்காதவண்ணம் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் முன்னதாக விஜய் கூறியுள்ளார். இந்தப் படத்தை டிவிவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் படத்தின் இயக்குநர் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது GOAT படத்தின் சூட்டிங் தாம்பரத்தில் நடந்து வருகிறது. இன்னும் 2 கட்ட சூட்டிங் மீதமுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











