அதே டிரெஸ்.. அவ்வளவு க்யூட்.. தளபதி ஹாஷ்டேக்கை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் விஜய் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருவரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்வு சென்னையில் உள்ள திருவான்மியூரில் இன்று நடைபெற்றது.
முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் விஜய் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.
மனைவியுடன் வந்த விஜய்
கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் பிகில் படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்நிலையில், அந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் இல்லத் திருமண விழாவுக்கு நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தனது மனைவி சங்கீதா உடன் நடிகர் விஜய் கலந்து கொண்டார். காரில் இருந்து இறங்கி மண மேடைக்கு சென்று மணமக்களை விஜய் வாழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

முதல்வருடன் சந்திப்பு
மேலும், அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் நேருக்கு நேர் பார்த்தபடி இருவரும் வணக்கம் தெரிவித்து பரஸ்பரம் மரியாதையை செலுத்திக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளன.

அதே காஸ்ட்யூம்
தளபதி 66 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட நடிகர் விஜய் அணிந்திருந்த அதே நீல நிற சட்டை மற்றும் சந்தன கலர் பேன்ட் உடனே திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கும் விஜய் வருகை தந்ததை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு எளிமையாக இருக்காரு என பாராட்டி வருகின்றனர்.

அவ்வளவு க்யூட்
அந்த ப்ளூ கலர் ஷர்ட்டில் நடிகர் விஜய் அவ்வளவு க்யூட்டாக இருக்கிறார் என ஏகப்பட்ட பெண்கள் கண் வைத்து விடுவார்கள் என தெரிந்து தான் நடிகை ராஷ்மிகா மந்தனா அப்பவே விஜய்க்கு திருஷ்டி உடைத்து விட்டாரா? என ரசிகர்கள் கமெண்ட் போட்டு விஜய்யின் அழகை ரசித்து வருகின்றனர்.

திணறும் டிரெண்டிங்
தளபதி 66 படத்தின் பூஜை போட்டோக்கள் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுடனான சந்திப்பு போட்டோக்களை அதிகளவில் ஷேர் செய்து #Thalapathy ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். அடுத்த வாரம் நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், உச்சகட்ட உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.

பேட்டிக்கு வெயிட்டிங்
பீஸ்ட் படத்துக்கு ஆடியோ லாஞ்ச் இல்லாத நிலையில், சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஆறுதலாக நடிகர் விஜய்யின் சிறப்பு பேட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதன் புரமோவை பார்த்து அசந்து போன ரசிகர்கள், முழு பேட்டியையும் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











