வெளிநாட்டில் மகளுடன் ஜாலியாக உணவருந்திய விஜய்... வைரலாகும் புகைப்படங்கள்!
மகளுடன் நடிகர் விஜய் உணவருந்தும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video

சென்னை: வெளிநாட்டு ஷாப்பிங் மால் ஒன்றில் நடிகர் விஜய் தனது மகளுடன் உணவருந்தும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய். தற்போது சர்கார் பட வேலையில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இதில் விஜய் பேசிய பஞ்ச் டயலாக்குகள் வைரலாக பரவியது.

பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள விஜய், அவர்களை அவ்வப்போது சந்திப்பதுடன், சமூக பிரச்சினைகளிலும் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார்.
நடிப்பு, ரசிகர்கள், சமூக பிரச்சினைகள் என பிசியாக இயங்கும் விஜய், தனது குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். அந்த வகையில் கனடா நாட்டுக்கு அவர் குடும்பத்துடன் சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள டொரண்டோ ஈடன் சென்டர் ஷாப்பிங் மாலில் நடிகர் விஜய், தனது மகள் திவ்யா ஷாஷாவுடன் உணவருந்தினார். கூட்டமாக இருக்கும் அந்த உணவகத்தில், அப்பாவும் மகளும் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டு உணவருந்தினர்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











