அட இது எப்போ.. பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் கமிட்டானாரா? என்ன கேரக்டர் தெரியுமா?
சென்னை: அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, நாசர், பிரகாஷ் ராஜ், ரகுமான் என ஏராளமானோர் லீட் ரோலில் நடித்திருந்தனர். இரண்டு பாகமான வெளியான இந்த படத்தில் விஜய் நடிக்க இருந்த கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
எம்.ஜி.ஆர் மற்றும் கமல்ஹாசனின் கனவு திரைப்படமாக இருந்த பொன்னியின் செல்வன் படத்தை இயக்குநர் மணிரத்தினம் இயக்கி முடித்துள்ளார். இத்திரைப்படத்தின் முதல் 2022ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர்

பொன்னியின் செல்வன் திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியானது. பொன்னியின் செல்வன் வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு படை எடுத்து படத்தை பார்த்து ரசித்தனர். முதல் பாகம் 500 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன்: பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் கடந்த ஆண்டு இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால், முதல் பாகத்தில் இருந்த ஆர்வம் இரண்டாம் பாகம் இல்லை என்று ரசிகர்கள் புலம்பினார்கள். மேலும், கிளைமாக்ஸ் காட்சியில் மணிரத்னம் தனது கற்பனையை புகுத்தி சொதப்பிவிட்டார் என்று இணையத்தில் பட்டிமன்றம் வைத்து பேசும் அளவுக்கு ஒரு விவாதமே நடந்தது. என்னத்தான் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும், பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் வசூல் நன்றாக இருந்தது.
கமிட்டான விஜய்: இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் தளபதி விஜய் நடிக்க இருந்ததாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் விஜய்யும், பொன்னியின் செல்வனாக மகேஷ் பாபு மற்றும் ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடிக்க இருந்தனர். மேலும் நந்தினியாக அனுஷ்கா ஷெட்டி நடிக்கவிருந்ததாக சொல்லப்படுகிறது. இது முழுவதுமாக முடிவான நிலையில், சில காரணங்களால் அது நடக்காமல் போனதாக தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











