இது பதவி அல்ல ’பொறுப்பு.. வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மரியாதை செலுத்தி அட்வைஸ் செய்த விஜய்!

சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து தளபதி விஜய் வாழ்த்து சொல்லி உள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நடிகர் விஜய்யை கடந்த வாரம் அவரது பனையூர் இல்லத்தில் நேரில் சென்று வாழ்த்து பெற்றனர்.

வெற்றி பெற்ற நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விஜய் அவர்கள் பெற்ற வெற்றி குறித்து மனமார பாராட்டி உள்ளார்.

அரசியலில் முதலடி

அரசியலில் முதலடி

நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊராட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் 129 பேர் வெற்றி பெற்றிருப்பது அரசியலில் நடிகர் விஜய்க்கு முதலடியாகவே பார்க்கப்படுகிறது. வெற்றி பெற்றவர்களை சந்தித்து நடிகர் விஜய் வாழ்த்தி இருப்பது அரசியல் வட்டத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. .

160 பேர் போட்டி

160 பேர் போட்டி

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 160 நிர்வாகிகள் ஊராட்சி தேர்தலில் போட்டி போட்ட நிலையில், 129 பேர் வெற்றி பெற்று விஜய் மக்கள் இயக்கத்திற்கும் நடிகர் விஜய்க்கும் மிகப்பெரிய பெருமையை தேடித் தந்துள்ளனர். ஒவ்வொரு நபரும் தனித்துவமாக பல நல்ல காரியங்களை செய்ததே இந்த வெற்றிக்கு காரணம் என்றும் தொடர்ந்து மக்கள் பணியை செய்ய வேண்டும் எனவும் விஜய் வாழ்த்தி உள்ளார்.

நிர்வாகிகளை முன்னிலைப்படுத்தி

நிர்வாகிகளை முன்னிலைப்படுத்தி

நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை வாழ்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் விஜய் இது உங்களுடைய வெற்றி என்பதை அவர்களுக்கு உணர்த்தும் விதமாக நிர்வாகிகளை முன்னிலைப்படுத்தி ஒரு ஓரத்தில் அமர்ந்து போஸ் கொடுத்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சால்வை அணிவித்து

சால்வை அணிவித்து

கடந்த அக்டோபர் 25ம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்த விஜய் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பெண் நிர்வாகி ஒருவர் விஜய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தலைவன் தரிசனம் கிடைத்து விட்டதாக கொண்டாடி வருகின்றனர்.

பதவி அல்ல பொறுப்பு

பதவி அல்ல பொறுப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்த தளபதி விஜய் "இது பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து பொதுவாழ்வில் தூய்மையையும் நேர்மையையும் கடைபிடிங்க" என அட்வைஸ் செய்துள்ளார்.

சம்மருக்கு பீஸ்ட்

சம்மருக்கு பீஸ்ட்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வரும் விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பீஸ்ட் படத்தில் விஜய் ராணுவ வீரராக நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு சம்மருக்கு பொன்னியின் செல்வன் உடன் பீஸ்ட் படம் போட்டியிட காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X