கேரளாவுக்கு ஒரு கோடி..! கேப்டனின் பெரிய மனசு!
கேரளாவுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் வழங்கப்படும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்
சென்னை: நடிகர் விஜயகாந்த் தேமுதிக சார்பில் கேரள மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத வெள்ளம் காரணமாக கேரளா மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. பல துறையைச் சேர்ந்தவர்களும் கேரளாவை மீட்டெடுக்க உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ரூ. 1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தேவையான உதவிகளை உடனடியாக வழங்க மத்திய அரசை கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சினிமாவில் அதிகமான புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த். நீண்ட இடைவெளிக்கு பிறகு, மகன் சண்முகப்பாண்டியனோடு தமிழன் என்று சொல் என்ற திரைபப்படத்தில் நடிப்பதாக இருந்தது. பிறகு விஜயகாந்தின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











