Actor Vijay: துவங்கியது GOAT படத்தின் அடுத்த ஷெட்யூல்.. வெங்கட் பிரபுவிற்கு விஜய் போட்ட கண்டிஷன்!

சென்னை: நடிகர் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் The greatest of all time படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சிறப்பாக நடந்து வருகிறது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்துவரும் நிலையில் தற்போது சென்னையில் சில தினங்கள் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்த சூட்டிங்கை தொடர்ந்து படக்குழுவினர் ராஜஸ்தான், துருக்கி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்த கட்டங்களில் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்தின் சூட்டிங்கை ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இன்றைய தினம் GOAT படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கியுள்ளது. தற்போது படத்தில் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த் ஆகியோர் இணைந்துள்ள பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். படத்தின் சூட்டிங்கை ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. இதையடுத்து தற்போது சூட்டிங் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Vijays Condition on GOAT movie shooting to the team

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் வாரிசு, லியோ படங்கள் கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவிக்க தவறவில்லை. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம் 600 கோடிகளை தாண்டி வசூலித்ததாக கூறப்பட்டுள்ளது. படத்தில் திரிஷா, கவுதம் மேனன், அர்ஜூன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்திருந்த நிலையில் படம் காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாகவும் அமைந்தது. படத்தில் ரசிகர்களை கவரும்வகையில் பல்வேறு சுவாரஸ்யங்களை இணைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

The greatest of all time படம்: இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படம் அவரது 48வது படமாக உருவாகி வருகிறது. படத்தில் பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என நட்சத்திரப் பட்டாளத்தையே இணைத்து வேலை வாங்கி வருகிறார் வெங்கட் பிரபு. அவரது வழக்கமான கேங்கும் படத்தில் இணைந்துள்ளது. வைபவ், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இதேபோல வெங்கட் பிரபு படங்களில் வழக்கமாக இசையமைத்துவரும் யுவன் சங்கர் ராஜாவும் இந்தப் படத்தில் இணைந்து இசையமைத்து வருகிறார்.

பாடல் காட்சி சூட்டிங்: படத்தின் சூட்டிங் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கிய நிலையில், சென்னை, ஐதராபாத், பாங்காக் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் பாடல் காட்சியை வெங்கட்பிரபு படம்பிடித்து வருகிறார். விஜய், பிரபுதேவா, பிரஷாந்த் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள இந்தப் பாடல் காட்சிக்கு பிரபுதேவாவே நடனம் அமைத்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சூட்டிங் சில தினங்களில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய் போட்ட கண்டிஷன்: தொடர்ந்து ராஜஸ்தான், இஸ்தான்புல் ஆகிய இடங்களில் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில் படத்தின் சூட்டிங்கை ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்ய நடிகர் விஜய் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய அவர் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்கேற்ப படத்தின் சூட்டிங்கை விரைவுப்படுத்த இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டு அதற்கேற்ப அடுத்தடுத்த சூட்டிங்கை எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X