Vijay: சென்னை மெட்ரோ ஸ்டேஷனில் நடக்கும் விஜய்யின் GOAT பட சூட்டிங்.. அப்டேட் இதோ!
சென்னை: நடிகர் விஜய் - வெங்கட் பிரபு காம்பினேஷனில் உருவாகியுள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். சயின்ஸ் பிக்ஷன் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். இதில் மகன் கேரக்டருக்காக அவருக்கு டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
மேலும் வெங்கட்பிரபுவின் பிரேம்ஜி, வைபவ் கேங்கும் இந்த படத்தில் இணைந்துள்ளன. இதனால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ள சூழலில் வரும் ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளையொட்டி இரண்டாவது சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் மாஸ்கோவில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே படக்குழுவினர் சென்னை திரும்பினர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இந்த படத்தின் பாடல் காட்சி சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. விஜய் மற்றும் திரிஷா இணைந்துள்ள இந்த பாடல் காட்சியின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ள சூழலில், அடுத்த சில தினங்களில் படத்தின் அடுத்த கட்ட சூட்டிங்கை சென்னையிலேயே வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.
GOAT பட சூட்டிங்: இந்த ஷூட்டிங் சென்னை மெட்ரோ ஸ்டேஷனில் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது படத்தின் ஆக்சன் காட்சியாக இருக்குமா? அல்லது வேறு ஏதாவது காட்சியாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக இன்னும் இரண்டு வாரங்கள் இந்த படத்தின் சூட்டிங் நடக்க உள்ளதாகவும் அத்துடன் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் கோட் படக் குழு நிறைவு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள சூழலில் அடுத்ததாக தளபதி 69 படத்தின் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி 69 பட அறிவிப்பு: இதுகுறித்து அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்த இரு படங்களுடன் தமிழ் சினிமாவில் இருந்து விஜய் விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக முன்னதாக அறிவித்துள்ளார். இதனால் இந்த இரு படங்களும் விஜய் கேரியரில் மிகவும் முக்கியமான படங்களாக அமைந்துள்ளன. தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாகாத சூழலில் வெங்கட் பிரபுவுடன் விஜய் இணைந்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் மீதான கவனம் அதிகபட்டுள்ளது. இந்தப் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சயின்ஸ் பிக்ஷன் கதைக்களம்: சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தில் திரிஷாவும் பாடல் ஒன்றுக்கு விஜய்யுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் வரும் ஜூன் மாதத்தில் விஜய் பிறந்தநாளையொட்டி இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











