Acot Vijay: GOAT சூட்டிங் ஸ்பாட்டில் விஜய்.. உற்சாகத்துடன் சுற்றி வளைத்த ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விஜய்யின் 68வது படத்தின் டைட்டில் சமீபத்தில் புத்தாண்டையொட்டி வெளியாகியுள்ளது. The greatest of All time என்று படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், பிரேம்ஜி, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார். விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் இந்தப் படத்தில் நடித்து வருகிறார். புத்தாண்டையொட்டி படத்தின் இருவேறு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

GOAT படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில், தற்போது சென்னை கோவளத்தையொட்டிய இடத்தில் அருகருகில் இரண்டு வீடுகளில் படத்தின் சூட்டிங் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சாலைகளிலும் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்த சூட்டிங்கை அடுத்து அடுத்ததாக படக்குழுவினர் ராஜஸ்தானுக்கு அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜூன் மாதத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி படம் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actor Vijays GOAT movie shooting spot video released in social media

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் வாரிசு, லியோ படங்கள் கடந்த ஆண்டில் வெளியாகி மாஸ் காட்டின. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சிறப்பாக அமைந்தன. குறிப்பாக லியோ படம் 600 கோடிகளை தாண்டி வசூலித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய 68வது படத்திற்காக இயக்குர் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார் விஜய். இந்தப் படத்திற்கு The Greatest of all time என்று பெயரிடப்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகின.

இயக்குநர் வெங்கட் பிரபு: தன்னுடைய படங்களில் தனித்தன்மை இருக்கும்வகையில படங்களை இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு. இவர்களின் இந்த கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் படத்தின் சூட்டிங் தற்போது சென்னை கோவளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த சூட்டிங்கை தொடர்ந்து அடுத்ததாக படக்குழுவினர் ராஜஸ்தான் செல்லவுள்ளனர். தொடர்ந்து இலங்கை, இஸ்தான்புல் போன்ற இடங்களிலும் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் சூட்டிங்: சென்னையில் தற்போது சூட்டிங் நடத்தப்பட்டு வரும் நிலையில் இரண்டு வாரங்களுக்கு இந்த சூட்டிங் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தளபதி என்று ரசிகர்கள் உற்சாகமாக அவரை பார்த்து குரல்கொடுத்த நிலையில், அவர்களை பார்த்து கையசைத்து புன்முறுவல் செய்த விஜய் தொடர்ந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார். கிளீன் ஷேவ் லுக்கில் விஜய் காணப்பட்ட நிலையில், இது GOAT படத்தின் மகன் லுக்கிற்கானது என்பது தெரியவந்துள்ளது.

விஜய்யை சுற்றிவளைத்த ரசிகர்கள்: இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானனோர் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர். அவர் விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாக கூறப்படும் நிலையில் GOAT படத்தை தொடர்ந்து அவர் சில காலங்கள் நடிப்பிற்கு இடைவெளி விடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்ததாக அட்லியுடன் இணையவுள்ளதாகதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை குறித்து விரைவில் விஜய் வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு பொதுநலப் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X