Actor Vijay: மாஸ்கோ சென்ற விஜய்யின் GOAT டீம்.. சூட்டிங் பிளான் தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் The greatest of all time. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிவரும் சூழலில் படததின் அடுத்தடுத்த கட்ட சூட்டிங்குகள் சென்னை, ஐதராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய தளபதி 69 படத்தில் நடித்து முடிக்கவுள்ள விஜய், இதையடுத்த நடிப்பிற்கு முழுக்குப் போடவுள்ளதாக கூறியுள்ளார். சமீபத்தின் தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்துள்ள விஜய், தொடர்ந்து தன்னுடைய அரசியல் என்ட்ரியையும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருந்தார்.

இதையடுத்து தான் படங்களில் நடிப்பது குறித்தும் ரசிகர்களுக்கு தெளிவுப்படுத்தியிருந்தார். தொடர்ந்து படங்களில் நடிக்கப் போவதில்லை என்ற விஜய்யின் முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்த போதிலும், அவரது அரசியல் என்ட்ரி குறித்த அறிவிப்பு அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனால் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகவுள்ள The greatest of All time மற்றும் தளபதி 69 படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளன. இதில் தளபதி 69 படத்தின் இயக்குநர் குறித்து தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Actor Vijays GOAT movie team reached Moscow for next schedule

நடிகர் விஜய்: நடிகர் விஜய் கோலிவுட்டில் 40 ஆண்டுகளை கடந்து நடித்து வருகிறார். தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் சிறுவனாக தன்னுடைய திரைப் பயணத்தை துவங்கிய விஜய், தொடர்ந்து ஹீரோவாகவும் 30 ஆண்டுகளை கடந்து மாஸ் காட்டி வருகிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ரஷ்யாவின் மாஸ்கோவில் படத்தின் ஷூட்டிங்கை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மாஸ்கோ சென்ற GOAT டீம்: இதற்காக GOAT டீம் தற்போது மாஸ்கோ சென்றுள்ளது. இங்கு அதிரடியான பல ஆக்ஷன் காட்சிகளை எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். மைனஸ் டிகிரி குளிரில் இந்த சூட்டிங் நடத்தப்பட உள்ளது. இந்த ஷூட்டிங் ஒரு மாத காலம் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்யவும் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். படம் ஆகஸ்ட் அல்லது தீபாவளி ரிலீசாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி படத்தின் அடுத்தடுத்த கட்ட சூட்டிங்குகளை இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டு நடத்தி வருகிறார்.

அரசியல் கட்சியை அறிவித்த விஜய்: சமீபத்தில் தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்துள்ளார் விஜய். The greatest of all time படத்தையடுத்து தளபதி 69 படத்தில் நடித்து முடித்துவிட்டு நடிப்பிலிருந்து விலக உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். தீவிர அரசியலில் தான் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருந்த போதிலும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஜய்யின் அரசியல் பிரவேசம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜய்யின் தளபதி 69 படம் அவரது கடைசி படமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் டிவிவி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

தளபதி 69 படம்: தளபதி 69 படத்தின் இயக்குனர் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தப் படத்தின் இயக்குநர் குறித்து நித்தம் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜி அல்லது கார்த்திக் சுப்புராஜ் தளபதி 69 படத்தை இயக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக இன்றைய தினம் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன, மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தளபதி 69 படததின் அறிவிப்பு மற்றும் இயக்குநர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக நடிகர் விஜய் 250 கோடி ரூபாய் சம்பளமாக பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X