Actor Vijay: ஏப்ரல் 14ல் வெளியாகும் GOAT படத்தின் பாடல்.. அப்ப விஜய் பிறந்தநாளுக்கு.. ட்ரீட் இருக்கு

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக ரஷ்யாவின் மாஸ்கோவில் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு இரண்டு வாரங்கள் தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் நடக்கவுள்ள நிலையில் ஓட்டு மொத்த ஷூட்டிங்கையும் படக்குழுவினர் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதத்தில் படம் சர்வதேச அளவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் கேட்டு வரும் சூழலில் அடுத்த மாதம் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்த படத்தின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி இதை உறுதி செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. அதில் எந்த பாடல் ரிலீஸ் ஆகும் என்பது குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். படத்தில் விஜய்யும் ஒரு பாடலை பாடியுள்ளார்.

Actor Vijay s GOAT movie teaser expected on June 22nd as his birthday special

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை, ஐதராபாத்இ கேரளா உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது, இதனிடையே படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் மாஸ்கோ பயணமாக உள்ளனர். அங்கு தொடர்ந்து இரு வாரங்களுக்கு இந்த படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்டு ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்ய வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. படத்தில் விஜயுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.

ஏராளமான நட்சத்திரங்கள்: இவர்கள் அனைவரையும் GOAT படத்தில் இணைத்து மாஸான கதைகளத்தை கொடுக்க திட்டமிட்டு வருகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேறு கெட்டபுகளில் விஜய் நடித்து வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில் விஜய்யின் ஒரு கேரக்டர் வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அழகிய திருமகன் படத்தில் அவர் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நிலையில் அதேபோன்ற ஒரு ஸ்டைலிஷ் வில்லன் கேரக்டரில் இதில் நடித்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏப்ரலில் வெளியாகும் பர்ஸ்ட் சிங்கிள்: இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் நேற்றைய தினம் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இதை உறுதி செய்துள்ளார். படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் அவரது இசையில் படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: மேலும் அஜித் படத்தில் இடம்பெற்றது போல GOAT படத்திலும் யுவன் சங்கர் ராஜா மாஸான பிஜிஎம்-ஐ அமைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வரும் ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாளை ஒட்டி படத்தின் டீசர் வெளியாகும் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்தடுத்து விஜய்யின் The greatest of all time படத்தின் அப்டேட்களை கேட்டுவந்த ரசிகர்களுக்கு இந்த தகவல்கள் உற்சாகத்தை அளித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X