Actor Vijay: குழந்தைத்தனத்தை வெளிப்படுத்திய விஜய்.. மாஸ்கோ வீதிகளில் ஸ்கேட்டிங் பயிற்சி!

சென்னை: நடிகர் விஜய, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஸ்நேகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் சூழலில் படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளது. தற்போது இறுதி கட்ட சூட்டிங் மாஸ்கோவில் நடந்து வருகிறது.

துபாய் வழியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் மாஸ்கோ புறப்பட்டு சென்றார். அவர் துபாய் விமான நிலையத்தில் இருக்கும் படியான வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதையடுத்து மாஸ்கோவில் ஷூட்டிங் நடக்கும் இடத்தின் லொகேஷன்களை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

Actor Vijay s Skating practise in Moscow in between the shooting of The greatest of all time movie

நடிகர் விஜய்: நடிகர் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ்கோவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூட்டிங்கிற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பாக துபாய் வழியாக மாஸ்கோ சென்ற விஜய்யின் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. மாஸ்கோவில் தொடர்ந்து இரு வாரங்கள் இந்த படத்தின் சூட்டிங் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் நாடு திரும்ப உள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளதாகவும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தமிழகத்தில் நடக்கவுள்ள சூழலில் அந்த தேர்தலில் விஜய் தனது வாக்கினை பதிவு செய்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாஸ்கோ சூட்டிங்: முன்னதாக இந்த படத்தின் சூட்டிங் மாஸ்கோவில் துவங்கிய நிலையில் படத்தின் சூட்டிங் நடக்கும் லொகேஷன்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்திருந்தார். தொடர்ந்து இன்றைய தினம் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் மாஸ்கோ நகர வீதிகளில் ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும்படியான வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் சிறு பிள்ளையைப் போல நடிகர் விஜய் மாஸ்கோவில் சூட்டிங் நடைபெறும் இடத்தில் ஸ்கேட்டிங் பழகியதை பார்க்க முடிந்தது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதை பகிர்ந்து வருகின்றனர்.

தளபதி 69 படம்: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தன்னுடைய தளபதி 69 படத்தில் இணையுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு இம்மாதத்தில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து படத்தின் சூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் துவங்கி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாகவும் அடுத்த ஆண்டிலிருந்து முழு நேரமாக அரசியலில் ஈடுபட்டு, வரும் சட்டமன்ற தேர்தலை தன்னுடைய கட்சி எதிர்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளில் விஜய் ஈடுபட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விஜய்யின் கட்சிப்பணி: தற்போது அவரது கட்சி சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இது குறித்து முன்னதாக விஜய் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து 2 கோடி உறுப்பினர்களை தன்னுடைய கட்சியில் சேர்க்க அவர் இலக்கு நிர்ணயத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நடிகர் விஜய் சினிமாநிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ள போதிலும் அவர் தன்னுடைய அடுத்தக்கட்டத்தை நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளது சிறப்பாகவே பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X