Thalapathy 68: தளபதி 68 டைட்டில் இதுதானா?.. இதுக்கும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் சண்டைக்கு வருவாங்களே!

சென்னை: இந்த ஆண்டு விஜய் வாரிசு மற்றும் லியோ என இரண்டு பாக்ஸ் ஆபிஸ் படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து அதிக வசூல் அள்ளிய நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ரஜினிகாந்த், அஜித், தனுஷ், சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த ஆண்டு படங்களை வெளியிட்ட நிலையிலும் நடிகர் விஜய் தனது ரசிகர்கள் பலத்தால் மாஸ் காட்டி வருகிறார்.

தளபதி 68 சரவெடி ரெடி: அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் டபுள் ஆக்ஷனில் விஜய் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அந்த படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

Actor Vijays Thalapathy 68 title leaked?

சென்னையில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு தாய்லாந்து மற்றும் தற்போது ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக இலங்கையிலும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதான் டைட்டிலா?: மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை மற்றும் கஸ்டடி உள்ளிட்ட படங்கள் சொதப்பிய நிலையில், தளபதி 68 படம் மீண்டும் அவருக்கு பெரிய கம்பேக் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் டிசம்பர் 31-ஆம் தேதி டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியீடு உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும், அந்த படத்திற்கு 'பாஸ்' என்கிற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக சில தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இது எந்தளவுக்கு உறுதியான தகவல் என்பது தெரியவில்லை. சூர்யாவுக்கு மாஸ் என டைட்டில் வைத்து பின்னர் மாசு என்கிற மாசிலாமணி என மாற்றியது போல மாற்றாமல் இருந்தால் சரி என்கின்றனர். ஏற்கனவே இந்தியில் அக்‌ஷய் குமார் நடித்த படத்திற்கு பாஸ் என்கிற டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.

ரஜினி ரசிகர்கள் கலாய்: தொடர்ந்து நடிகர் விஜய் தனது படங்களுக்கு மாஸ்டர், பீஸ்ட், லியோ என வாரிசு படத்தை தவிர்த்து மற்ற படங்களுக்கு பால் இந்தியாவை டார்கெட் செய்து ஆங்கில தலைப்புகளை வைத்து வருகிறார். இந்நிலையில், பாஸ் என்கிற டைட்டில் தளபதி விஜய்க்கு கச்சிதமாக பொருந்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆனால், சிவாஜி தி பாஸ் படத்தில் இருந்து உருவப்பட்ட டைட்டிலா? என ரஜினி ரசிகர்கள் இன்னொரு பக்கம் சோசியல் மீடியாவில் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். வரும் டிசம்பர் 31ம் தேதி மாலை 6 மணிக்கு தளபதி 68 படத்தி்ன் மோஷன் போஸ்டருடன் டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X