Actor Vijay: விஜய் பிறந்தநாளில் துவங்கும் தளபதி 69 பட சூட்டிங்?.. சூப்பர் பிளானுடன் களமிறங்கும் டீம்!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ள சூழலில் அடுத்ததாக அவர் தளபதி 69 படத்தின் ஷூட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளார். இம்மாதத்திலேயே தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை டிவிவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஏறக்குறைய ஹெச் வினோத் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரசியலை மையமாக வைத்து இந்த படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ள விஜய்க்கு இதுபோன்ற ஒரு சப்ஜெக்ட்டில் படம் வெளியாவது மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தப் படம் குறித்தும் படத்தின் இயக்குனர் குறித்தும் இந்த மாதத்தில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அடுத்தடுத்த கொண்டாட்டங்களுக்காக காத்திருக்கின்றனர்.

Actor Vijay s Thalapathy 69 movie shooting starts on his birthday in June it seems

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். படத்தில் அவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்களுடன் வெங்கட் பிரபுவின் கேங்கை சேர்ந்த வைபவ், பிரேம்ஜி உள்ளிட்டவர்களும் இணைந்து நடித்து வருகின்றனர். சயின்ஸ் பிக்ஷன் கதைக்களமாக உருவாகி வரும் இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்து வருவது தெரிந்த விஷயம்தான். இதில் ஒரு கேரக்டர் நெகட்டிவ் ஷேடில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் ரிலீஸ்?: இந்நிலையில் இந்தப்படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகஸ்ட் 15ம் தேதி இந்தப்படம் வெளியாகலாம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த தேதியை புஷ்பா 2 படம் லாக் செய்துள்ளது. அதனால் ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட படங்கள் வெளியாவதில் உள்ள சிக்கல் காரணமாக விஜய்யின் GOAT படத்தின் ரிலீஸ் அந்த தேதிக்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் தளபதி 69 படத்தின் இயக்குனர் குறித்த தகவல்களும் ஏறக்குறைய உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தளபதி 69 படத்தின் சூட்டிங் பிளான்: இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க உள்ளதாகவும் அரசியல் பின்னணியில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த படத்தை டிவிவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அனைத்து தகவல்களும் இன்னும் சில தினங்களில் உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். இம்மாதத்தில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் விஜய்யின் பிறந்த நாளை ஒட்டி படக்குழுவினர் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படக்குழுவினரின் அடுத்தடுத்த திட்டம்: மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து அடுத்த ஆண்டிலிருந்து தன்னுடைய அரசியல் பயணத்தை தீவிரமாக நடிகர் விஜய் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி விஜய், அடுத்த ஆண்டு முழுவதும் தன்னுடைய அரசியல் பயணத்தை தீவிரமாக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் தளபதி 69 படங்களின் ஷூட்டிங்கை இந்த ஆண்டிலேயே நிறைவு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இதனிடையே தளபதி 69 படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீசாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X