Actor Vijay: தளபதி 69 படத்திற்கு தயாராகும் விஜய்.. ஆர்ஆர்ஆர் தயாரிப்பாளருடன் இணைய திட்டமா?
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படம் வசூல் சாதனை புரிந்தது. 600 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்து பட்டையை கிளப்பியது. இந்தப் படத்தில் திரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த நிலையில் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விஜய்யின் கேரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக GOAT படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் நிறைவு செய்து கோடை கொண்டாட்டமாக வெளியிட வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்தப்படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகறது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட இளம் இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். அவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெறும் நிலையிலும், படம் வசூல்சாதனை படைப்பதில் இருந்து பின்வாங்குவதில்லை. அந்த வகையில் விஜய்யின் பீஸ்ட், வாரிசு மற்றும் லியோ என அடுத்தடுத்த படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தபோதிலும் வசூல்சாதனை படைத்தது. குறிப்பாக கடந்த ஆண்டில் வெளியான லியோ படம் 600 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்துள்ளது.
விஜய் -வெங்கட்பிரபு கூட்டணி: இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யின் தளபதி 68 படத்தை யார் இயக்குவார் என்று பட்டிமன்றமே நடத்தப்பட்டது. இறுதியில் இந்த வாய்ப்பு வெங்கட் பிரபு கைக்கு சென்றது. விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் பிரம்மாண்டமான பூஜையுடன் தளபதி 68 படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், படத்திற்கு தற்போது GOAT என்று பெயரிடப்பட்டுள்ளது. The greatest of all time என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அப்பா மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்து வருகிறார். இதன் போஸ்டர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
GOAT படம்: சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் GOAT படத்தின் சூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்ததாக துருக்கி, ராஜஸ்தான், இலங்கை என அடுத்தடுத்த ஸ்பாட்களில் இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தளபதி 69 படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. எப்போதும் தன்னுடைய ஒரு படத்தின் சூட்டிங் 50 சதவிகிதம் இருக்கும்போதே அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை விஜய் மேற்கொண்டுவிடுவார். அந்தவகையில் தற்போது GOAT படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் விஜய்யின் அடுத்தப்படம் குறித்த எந்த அறிவிப்பும் மேற்கொள்ளப்படவில்லை.
தளபதி 69 படம்: இந்நிலையில் விஜய் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் GOAT படத்தை தொடர்ந்து அவர் 2 ஆண்டுகளுக்கு படங்களில் நடிக்காமல் அரசியலில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனிடையே ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் விஜய்யின் தளபதி 69 படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக மிகப்பெரிய தொகை விஜய்க்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மேக்கிங் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்ததாக விஜய் யாருடைய இயக்கத்தில் இணைவார் என்பது குறித்தும் விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











