பர்ஸ்ட் லுக் போஸ்டர் மேக்கிங்.. விஜய் -வெங்கட்பிரபு மாஸ் போட்டோ.. ஒரிஜினலைவிட நல்லாஇருக்கே!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் தற்போது கேரளாவில் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக ஏப்ரல் முதல் வாரத்தில் விஜய் உள்ளிட்ட படக் குழுவினர் மாஸ்கோ செல்ல உள்ளனர். மாஸ்கோவில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து இரு வாரங்களுக்கு நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்களும் சளைக்காமல் கேட்டு வரும் நிலையில் பட குழுவினரும் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களாக கேரளாவில் விஜய்யின் அடுத்தடுத்த செயல்பாடுகளின் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் சூட்டிங் நடந்து வந்த நிலையில் ஷூட்டிங்கை காட்டிலும் கேரள ரசிகர்களுடன் விஜய் பேசியது பழகியது ஆகியவை மிகவும் ட்ரெண்டாகின. இந்தப்படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் அடுத்த மாதம் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் ஆகஸ்ட் 23ம் தேதி ரிலீசாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப படத்தின் சூட்டிங்கை துரிதப்படுத்தி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Vijay s The greatest of all time movie first look making photo shared by Director Venkat prabhu

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களாக கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட சூட்டிங்கிற்காக ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பயணமாக உள்ளனர். அங்கு தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு இந்த படத்தின் சூட்டிங் நடக்க உள்ளதாகவும் அடுத்த மாதத்தில் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 69 படம்: இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்திலும் நடிகர் விஜய் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அந்த படத்தை பிரபல தெலுங்கு பட நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளது. இந்த இரு படங்களை தொடர்ந்து விஜய் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் 200 முதல் 250 கோடிகள் வரை சம்பளமாக பெற்று வருகிறார் விஜய். அந்த வகையில் இந்திய அளவில் அதிகமாக சம்பளம் பெறும் நடிகராகவும் காணப்படுகிறார். இவ்வளவு கோடி சம்பளத்தை விட்டுவிட்டு அவர் தன்னுடைய தமிழக வெற்றி கழகம் சார்பில் அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதும் சினிமாவில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளதும் அதிகமான கவனத்தைப் பெற்றுள்ளது.

GOAT பட கேரள சூட்டிங்: ற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் சென்னை, பாங்காக், கேரளா உள்ள இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் கொடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக கேரளாவில் விஜய் விமானம் மூலம் சென்று இறங்கியது முதல் ரசிகர்களுக்கு பாய் சொல்லிவிட்டு கிளம்பியது வரை ஒவ்வொரு நாளும் கேரள ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரு வேறு கெட்டப்களில் நடித்துள்ளார். இதன் போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன.

பர்ஸ்ட் லுக் மேக்கிங் போஸ்டர்: படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியான நிலையில் தற்போது அதன் மேக்கிங் புகைப்படத்தை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். அதில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு காணப்படுகின்றனர். அப்பா மற்றும் மகன் விஜய் கைகளை அடித்துக் கொள்ளும் படியாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது அதேபோல இந்த மேக்கிங் புகைப்படத்திலும் காணப்படுகிறது. அந்த புகைப்படத்தை காட்டிலும் இந்த மேக்கிங் புகைப்படம் சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் GOAT படம் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் நிலையில் அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Actor Vijay s The greatest of all time movie first look making photo shared by Director Venkat prabhu

விஜய் படத்தில் காத்திருக்கும் சம்பவம்: படம் சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ளநிலையில் படத்தில் ஒரு விஜய் வில்லனாக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரி மற்றும் சினேகா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் ஒரு பாடல் காட்சியில் நடிகை திரிஷாவும் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். முன்னதாக லியோ படத்தில் விஜய் மற்றும் த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி சிறப்பாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த பாடல் காட்சியும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த மாதத்தில் விஜயின் தளபதி 69 படத்தின் அறிவிப்பும் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இயக்குனர் யாராக இருப்பார்கள் என்பது குறித்து சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஒவ்வொரு அப்டேட்டாக வெளியாகி வருகிறது இதில் எது உண்மை மற்றும் யார் விஜயின் கடைசி படத்தை இயக்கப் போகிறார்கள் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X