Actor Vijay: The greatest of All time படத்தின் அடுத்தடுத்த ஷெட்யூல்.. அடுத்த சூட்டிங் எங்க தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள படம் The greatest of All time. இந்தப் படத்தின் சூட்டிங் பாங்காக், சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது. பூஜையுடன் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் முதலில் சென்னையில் நடத்தப்பட்டது. விஜய்யுடன் பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படம் கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையொட்டி தற்போது படத்தின் சூட்டிங் விரைவு படுத்தப்பட்டுள்ளது.

படத்தின் சூட்டிங் சென்னையில் பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுடன் துவங்கிய நிலையில் தொடர்ந்து பாங்காக், ஐதராபாத் போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னை கோவளத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இரு வீடுகளை அடுத்தடுத்து அமைத்து இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் சாலைகளிலும் இந்த சூட்டிங் நடத்தப்பட்டு வருவதாகவும் இரு வாரங்களுக்கு சென்னையில் படத்தின் சூட்டிங் தொடரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Vijays The greatest of All time movie next to next shooting plans
நடிகர் விஜய்: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் The greatest of All time படம். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக், இரண்டாவது லுக் போஸ்டர்கள் புத்தாண்டையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகின. The greatest of All time சுருக்கமாக GOAT என்று இந்தப் படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள போஸ்டர்களில் மகன் விஜய் மிகவும் இளமையாக காணப்படுகிறார்.

இருவேறு கேரக்டர்கள்: மகன் விஜய் மற்றும் அப்பா விஜய் கைக்கோர்த்தபடி இந்த போஸ்டர்களில் காணப்படுகின்றனர். இதில் மகன் விஜய்யின் லுக் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கப்பட்டு, தொடர்ந்து பாங்காக், ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது. தற்போது சென்னையில் மீண்டும் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூட்டிங் 2 வாரங்களுக்கு நடத்த இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். அடுத்தடுத்து இருவேறு வீடுகளில் மற்றும் சாலைகளில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகின்றன.

ராஜஸ்தான் சூட்டிங்: அடுத்தக்கட்ட சூட்டிங் இஸ்தான்புல்லில் நடத்தப்பட திட்டமிடப்பட்ட நிலையில், அங்கு தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான சூழல் இல்லாத காரணத்தால் அடுத்ததாக ராஜஸ்தானில் சூட்டிங்கை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. பிப்ரவரியில் இந்த சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அடுத்ததாக ஸ்ரீலங்காவிலும் இஸ்தான்புல்லிலும் சூட்டிங்கை நடத்த இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டில் நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் லியோ படங்கள் அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான நிலையில் தற்போது GOAT படமும் வித்தியாசமான ஜானரில் உருவாகி வருகிறது.

எதிர்பார்ப்பில் GOAT படம்: நடிகர் விஜய் விரைவில் அரசியலில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாகவும் இதற்காக GOAT படத்தை தொடர்ந்து அவர் நடிப்பிற்கு சில காலம் இடைவெளி விடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. GOAT படத்திற்காக மிக அதிகமான சம்பளம் விஜய்க்கு கொடுக்கப்பட்டுளள்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் எப்போதும் தன்னுடைய வித்தியாசமான கதைக்களங்களால் ரசிகர்களை கவர்ந்துவரும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இணைந்துள்ளது அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் அவரது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தும் விஷயங்கள் இருக்குமா என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளின் ஒன்றாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X