Actor Vijay: திருவனந்தபுரத்தில் துவங்கிய GOAT பட சூட்டிங்.. பிரபுதேவா எங்க போயிருக்காரு தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசியல் என்ட்ரி குறித்த தன்னுடைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய். தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக தளபதி 69 படத்துடன் தான் திரையுலகில் இருந்து விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இதையடுத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதத்திற்குள் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்றைய தினம் திருவனந்தபுரத்தில் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் படத்தின் சூட்டிங்கிற்காக படக்குழுவினர் மாஸ்கோ செல்ல உள்ளனர்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் திரையுலக பயணம் கடந்த 40 ஆண்டுகளை கடந்து சிறப்பாக இருந்து வருகிறது. தன்னுடைய அப்பா எஸ்ஏசியின் படங்களில் சிறுவனாகவே நடித்துள்ளார் விஜய். இதையடுத்து நாளைய தீர்ப்பு படம் மூலம் தன்னுடைய மாஸான என்ட்ரியை தமிழ் சினிமாவில் அவர் கொடுத்துள்ளார். அடுத்தடுத்து சாக்லேட் பாய் கேரக்டர்களில் மட்டுமில்லாமல் பல ஜானர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார் விஜய். அந்த வகையில் கடந்த ஆண்டில் வாரிசு மற்றும் லியோ என விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகின. இந்த இரு படங்களுமே வசூலில் சிறப்பாக அமைந்த போதிலும் கலவையான விமர்சனங்களையே பெற்றன.
GOAT பட சூட்டிங்: தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட்ட நிலையில் அடுத்த மாதத்திற்குள் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் படக்குழுவினர் நிறைவு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்து சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இந்த படத்தின் சூட்டிங் நடந்து வந்த நிலையில் இன்று முதல் திருவனந்தபுரத்தில் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரள ரசிகர்களை இந்த சூட்டிங்கின்போது விஜய் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
14 ஆண்டுகளுக்கு பிறகு சூட்டிங்: முன்னதாக கடந்த 2011ம் ஆண்டில் விஜய்யின் காவலன் பட சூட்டிங் கேரளாவில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த ஷூட்டிங்கில் பிரபுதேவா உள்ளிட்டவர்கள் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளனர். இன்னும் சில தினங்களில் இந்த சூட்டிங்கில் விஜய் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு நேற்றைய தினம் தனி விமானம் மூலம் படக்குழுவினர் புறப்பட்டு சென்றுள்ளனர். சூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ள நடிகர் பிரபுதேவா சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் சாமி தரிசனம் மேற்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பாடலுக்கு நடனமும் அமைத்த பிரபுதேவா:இந்த படத்தின் சூட்டிங் சில தினங்கள் கேரளாவில் நடக்க உள்ள நிலையில் அடுத்ததாக பட குழுவினர் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக மாஸ்கோ செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாஸ்கோவில் அடுத்தடுத்து 2 வாரங்கள் GOAT படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யின் ஒரு பாடலுக்கு பிரபுதேவாவும் நடனம் அமைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பல வருடங்களை கடந்து தற்போது இருவரும் நடனமாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











