twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காத்திருப்புக்கு காலம் தந்த பரிசு.. தடைக்கற்களை படிக்கல்லாக்கிய பிதாமகன்! #HBDChiyaanVikram

    |

    சென்னை: நடிகர் விக்ரம் இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    Recommended Video

    Exclusive: Cobra TRAILER | Vikram | Ajay Gnanamuthu

    நடிகர் விக்ரம், என் காதல் கண்மணி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்நது புதிய மன்னர்கள், உல்லாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் விக்ரம்.

    ஆனால் அந்தப் படங்களில் பெரும்பாலானவை யாருக்கும் தெரியாமலே போய்விட்டது. 9 வருட போராட்டங்கள்.. காத்திருப்பு.. 1999ஆம் ஆண்டு, இயக்குநர் பாலாவின் சேது படத்தில் நடித்தார் விக்ரம்.

    பிதாமகனின் பிறந்தநாள்.. டெடிகேஷனின் மொத்த உருவம் சியான் விக்ரம்.. டிரெண்டாகும் #HBDChiyaanVikramபிதாமகனின் பிறந்தநாள்.. டெடிகேஷனின் மொத்த உருவம் சியான் விக்ரம்.. டிரெண்டாகும் #HBDChiyaanVikram

    எவ்வளவு பெரிய ரிஸ்க்

    எவ்வளவு பெரிய ரிஸ்க்

    அவ்வளவுதான் அந்த ஒரே படத்தில் உச்சத்துக்கு சென்றார். நடிப்புக்காக எப்பேர்ப்பட்ட ரிஸ்கையும் எடுக்க தயங்காதவர் விக்ரம் என்பது அந்தப் படத்திலேயே புரிந்தது. 2000ஆம் ஆண்டு முதல், ஏறுமுகம்தான். அடுத்தடுத்து தில், ஜெமினி, தூள், சாமி உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்து உச்ச நடிகராக உயர்ந்தார்.

    தேசிய விருது..

    தேசிய விருது..

    2003ஆம் ஆண்டு மீண்டும் இயக்குநர் பாலாவுடன் கைக்கோர்த்தார் விக்ரம். இருவரின் கூட்டணியிலும் உருவான பிதாமகன் படம் விக்ரமின் 9 ஆண்டு நடிப்பு பசிக்கு பெரும் தீனியாக இருந்தது. அந்த படத்தில் தனது அசாத்திய நடிப்பால் தேசிய விருதை தட்டிச் சென்றார்.

    தெய்வ திருமகள்

    தெய்வ திருமகள்

    தொடர்ந்து பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் அந்நியன் படத்தில் நடித்து மீண்டும் நடிப்புதான் தன் வாழ்க்கை என்பதை சொல்லாமல் சொன்னார். 2011ஆம் ஆண்டு வெளியான தெய்வ திருமகள் படத்தில் 6 வயது குழந்தைக்கு உள்ள மெச்சூரிட்டியுடன் மனவளர்ச்சி குன்றிய நபராக நடித்து அசத்தியிருப்பார்.

    ஹேட்டர்ஸ் இல்லை

    ஹேட்டர்ஸ் இல்லை

    தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வரும் நடிகர் விக்ரம், பல பாடல்களையும் பாடியிருக்கிறார். தற்போது கோப்ரா படத்தில் 20 கெட்டப்புகளில் நடிக்கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ரசிகர்களால் சீயான் விக்ரம் என்று அழைக்கப்படும் விக்ரம் ஹேட்டர்ஸ் இல்லாத ஒரு நடிகர்.

    வரும் தலைமுறை

    வரும் தலைமுறை

    தோல்விகளால் துவலும் இளம் நடிகர்களுக்கு திறமையும் பொருமையும் இருந்தால் யாராலும் எதையும் தடுக்க முடியாது என்பதற்கு அடையாளமாக திகழ்கிறார் இந்த பிதாமகன் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிவாஜியை கலைத்தாயின் தலைமகன் என தற்போதுள்ள தலைமுறை கொண்டாடுவதை போல் வரும் தலைமுறை விக்ரமையும் நடிப்பின் நாயகன் என புகழும் என்பதை மறுப்பதற்கில்லை.

    English summary
    Actor Vikram celebrates his 54th birthday today. He started his carrier with En Kadhal Kanmani.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X