twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மூன்றாவது மொழியாக தமிழை படித்த சிவாஜி கணேசனின் பேரன்.. வசமாக சிக்கிய விக்ரம் பிரபு!

    |

    சென்னை: கும்கி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை எழுதி, இயக்கியவர் பிரபு சாலமன் .

    இப்படத்தில் விக்ரம் பிரபு உடன் இணைந்து லட்சுமிமேனன், தம்பி ராமையா போன்ற பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.

    தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் பிரபு பேசிய விஷயங்கள் சர்ச்சையாக மாறி உள்ளது.

    அட்டகாசமான நடிப்பு..நண்பர் சிம்புக்கு நன்றி.. ஹன்சிகா மோத்வானி நெகிழ்ச்சி!அட்டகாசமான நடிப்பு..நண்பர் சிம்புக்கு நன்றி.. ஹன்சிகா மோத்வானி நெகிழ்ச்சி!

    தொடர் படங்களில் வாய்ப்பு

    தொடர் படங்களில் வாய்ப்பு

    கும்கி வெற்றி படத்தை தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான டாணாக்காரன் திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாயும் புலி நீ எனக்கு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விக்ரம் பிரபு. இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

    பிரம்மாண்ட படைப்பு

    பிரம்மாண்ட படைப்பு

    இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது தான் பொன்னியின் செல்வன் திரைப்படம். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு போன்ற பலரும் படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த 8ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

    முக்கியமான கதாபாத்திரம்

    முக்கியமான கதாபாத்திரம்

    பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, இப்படத்திற்கான ஆவலையும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு பார்த்திபேந்திர பல்லவா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் இவர் பேசிய விஷயங்கள் தற்போது சர்ச்சையாக மாறி உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் விக்ரம் பிரபு பேசியதாவது, "

    என் தாத்தா பொன்னியின் செல்வன் புத்தகத்தை கொண்டு வா என்று கூறினார், அப்பொழுது தான் நான் தமிழ் கற்றுக் கொண்டிருக்கும் வயது, மூன்றாம் வகுப்பு படிக்கிறேன் என்று நினைக்கிறேன், மூன்றாவது மொழியாக தமிழை படித்தேன். நானும் ஸ்டோர் ரூமில் இருக்கும் புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்தேன்.

    வாய்ப்புக்கு நன்றி

    வாய்ப்புக்கு நன்றி

    ஒரு புத்தகம் இல்ல ஐந்து புத்தகங்கள் இருக்கும் என்று சொன்னார், பொன்னியின் செல்வன் என்று சொன்னாலே இந்த ஒரு விஷயம் மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது, இயக்குநர் மணிரத்னம் அழைத்து இந்த கதாபாத்திரம் தான் உனக்கு என்று சொன்னவுடன் எனக்கு அது ஒரு பெரிய பரிசு போலவே இருந்தது என்று கூறியுள்ளார் விக்ரம் பிரபு. இதை கேட்ட ரசிகர்கள் மிகப்பெரிய நடிகரும், கலைஞருமான சிவாஜி கணேசன் பேரன் தமிழ் மொழியை மூன்றாவது மொழியாக பள்ளியில் படித்தாரா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். பலரும் இவரது பேச்சை சர்ச்சையாக நினைத்தாலும், இவரது ரசிகர்கள் இவர் வெளியூரில் படித்து இருப்பார் அதனால் மூன்றாவது மொழியாக தமிழை படித்திருக்கலாம் என்று இவருக்கு ஆதரவாக பதில் அளித்து வருகின்றனர்.

    English summary
    Actor vikram Prabu Studied Tamil as Third Language at the time of his education
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X