விரைவில் இந்தியில் நாயகனாக அறிமுகமாகிறார் விக்ரம்

By Sudha

Vikram
சீயான் விக்ரமைத் தேடி இந்தியிலிருந்து வாய்ப்புகள் அலை மோத ஆரம்பித்துள்ளனவாம். எல்லாம் ராவண் படத்தில் அவர் காட்டிய மிரட்டல் நடிப்புக்காக.

தமிழ், இந்தியில் உருவாகி வெளியான ராவணன் படம் யாருக்கு பிரேக் ஆக இருந்ததோ, விக்ரமுக்கு இந்தியில் பெரும் ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஒரே நபராக வில்லனாகவும், ஹீரோவாகவும் அவர் செய்த அசத்தலான கதாபாத்திரமும், அவரது நடிப்பும் இந்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதை விட இந்தி திரையுலகினரையும் மெய்மறக்க செய்துள்ளது.

பலரும் விக்ரமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியது போக இப்போது அவரை தங்களது படங்களில் நடிக்குமாறும் அழைக்க ஆரம்பித்துள்ளனராம்.

அவர்களில் முக்கியமானவர் நீரஜ் பாண்டே. இவர் ஏ வெட்னஸ்டே படத்தை இயக்கியவர். நசிருதீன் ஷா, அனுபம் கெர் நடிப்பில் உருவான இப்படம்தான் தமிழில் கமல்ஹாசன், மோகன்லால் நடிப்பில் உன்னைப் போல் ஒருவனாக ரீமேக் ஆகி வடக்கையும், தெற்கையும் கவர்ந்ததாகும்.

நீரஜ் பாண்டே ராவண் படத்தைப் பார்த்து அசந்து போய் விட்டாராம். சமீபத்தில் சென்னை வந்திருந்த அவர் விக்ரமை சந்தித்துள்ளார். அவரை வெகுவாக பாராட்டிய நீரஜ், தனது படத்தில் நடிக்குமாறும் விக்ரமை கேட்டுள்ளார். விக்ரமும் மகிழ்ச்சியுடன் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X