Actor Vikram: காத்திருப்பு ஓவர்.. அடுத்தமாதம் துவங்கும் சியான் 62 பட சூட்டிங்!
சென்னை: தான் ஏற்கும் கேரக்டர்களை சிறப்பாக அமைப்பதற்காக மிகப்பெரிய அளவில் மெனக்கெட்டு வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து வருகின்றன. கடந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் மிகப்பெரிய வரவேற்பை விக்ரமிற்கு பெற்று தந்தது. மல்ட்டி ஸ்டாரர் படமாக இருந்த போதிலும் விக்ரம் இந்த படத்தில் மாஸ் காட்டி இருந்தார். இந்நிலையில் இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது SU அருண்குமார் இயக்கத்தில் தன்னுடைய 62வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டிலேயே வெளியாகியது. தொடர்ந்து படத்தின் அறிவிப்பு வீடியோவில் வெளியானது. இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்த மாதத்தில் படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளதாகவும் படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தை சித்தா படத்தை இயக்கி கோலிவுட்டில் கவனம் ஈர்த்துள்ள SU அருண்குமார் இயக்கவுள்ளார். எச்ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார்.

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்கள் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 சிறப்பான வரவேற்பை பெற்று தந்தது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். மணிரத்தினம் இயக்கத்தில் மல்ட்டி ஸ்டாரர் படமாக வெளியான போதிலும் சியானின் நடிப்பு இந்த படத்தில் தனியாக வெளிப்பட்டது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராயின் நந்தினி கேரக்டரை காதலித்து ஆனால் அந்த காதல் கை கூடாத நிலையில் தன்னுடைய விரக்தியை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார் விக்ரம்.
தங்கலான் படம்: தன்னுடைய படங்களுக்காக மிகப்பெரிய மெனக்கெடல்களை செய்து வருகிறார் விக்ரம். இந்நிலையில் அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் கேஜிஎப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. படத்தில் மிரட்டலான லுக்கில் இருவேறு கெட்டப்புகளில் காணப்படுகிறார் விக்ரம். படத்தில் பிரியங்கா மோகனன், பசுபதி, பார்வதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து சித்தா பட இயக்குநர் SU அருண்குமார் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் விக்ரம்.
சித்தா இயக்குநருடன் இணைந்த விக்ரம்: சித்தா படத்தை இயக்கி அதன் மூலம் கோலிவுட்டை தன் பக்கம் திருப்பியுள்ளார் அருண்குமார். இந்நிலையில் அருண்குமார் மற்றும் விக்ரமின் கூட்டணி தற்போது கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலேயே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. படத்தின் அறிமுக வீடியோவும் மிரட்டலாக வெளியான நிலையில் படத்தின் சூட்டிங் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை அருண்குமார் நிறைவு செய்துள்ளதாகவும் அடுத்த மாதத்தில் படத்தில் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
விக்ரமுடன் இணைந்த முன்னணி நடிகர்கள்: படத்தை எச்ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரிக்கவுள்ளார். படத்தில் விக்ரமுடன் எஸ்ஜே சூர்யா மற்றும் மலையாள நடிகர் சுராஜ் இணைந்து நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகை மற்றம் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து தங்கலான் மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில அடுத்ததாக உருவாகவுள்ள சியான் 62 படமும் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











