Actor Vikram: தம்பி நாங்களும் போட்டோகிராபர் தான்.. ரசிகரை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்ரம்!

சென்னை: நடிகர் விக்ரம் அடுத்தடுத்து மாஸ் கூட்டணியில் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார் விக்ரம். இந்த படத்தில் ஆதித்ய கரிகாலனாக நந்தினியின் காதலனாக நடித்து மாஸ் காட்டியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் உருவாகி உள்ளது.

தங்கலான் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே நிறைவு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்த படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த படத்தை ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் தற்போது ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது. இதையொட்டி விக்ரம், மாளவிகா மோகனன், பா ரஞ்சித், பார்வதி உள்ளிட்டவர்கள் படத்தின் பிரமோஷன்களில் சிறப்பாக பங்கேற்று ஏராளமான ரசிகர்களையும் பத்திரிகையாளர்களையும் சந்தித்து வருகின்றனர்.

Vikram Thangalaan movie Pa Ranjith

நடிகர் விக்ரம்: விக்ரம் அடுத்தடுத்து மாஸ் படங்களில் மாஸ் பட இயக்குனர்களுடன் இணைந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் விக்ரம், பா ரஞ்சித், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டவர்கள் இணைந்து வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து இந்த படத்தின் ப்ரோமோஷன்கள் நடத்தப்பட்டுள்ளன.

தங்கலான் பட பிரமோஷன்கள்: பிரமோஷனுக்காக மதுரை செல்லும் வழியில் பிரபல ரெஸ்டாரெண்டில் மக்களுடன் மக்களாக இணைந்து நடிகர் விக்ரம் உணவு சாப்பிட்டதை பார்க்க முடிந்தது. இதன் வீடியோக்கள் நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. உணவகத்தின் ஊழியர்கள் மற்றும் ரசிகர்களுடன் சியான் விக்ரம் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். மேலும் விக்ரம் அடுத்தடுத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே தன்னுடைய ரசிகருக்கு அவர் புகைப்படங்களை எடுத்துக் கொடுத்தது மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

போட்டோகிராபராக மாறிய விக்ரம்: முன்னதாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த விக்ரம் ஒரு கட்டத்தில் தானும் ஒரு போட்டோகிராபர் தான் என்னும் வகையில் உட்கார்ந்த நிலையில் வித்தியாசமான கோணத்தில் புகைப்படத்தை எடுத்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விக்ரம், முன்னணி நடிகர்களுக்கு இணையாக அவருக்கு ரசிகர்கள் அதிக அளவில் இல்லையோ என்ற கேள்வியை எதிர்கொண்டார். இதனால் டென்ஷன் ஆன அவர், தனக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளதாகவும் ஜெனரல் ஆடியன்ஸ் எனக்கு அதிக அளவில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டென்ஷனான விக்ரம்: தங்கலான் படம் ரிலீசானவுடன் திரையரங்கில் வந்து பார்க்குமாறும் அவர் கூறினார். தில், தூள் போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து தான் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்ததாகவும், தற்போது சேலஞ்சிங்கான கேரக்டர்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அதன் எதிரொலியாகத்தான் தங்கலான் படம் வெளியாகவுள்ளதாகவும் விக்ரம் மேலும் கூறியுள்ளார். தங்கலான் படத்தின் முன்பதிவுகள் தற்போது துவங்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் படத்தை புக் செய்ய ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X