ஜாதி, மதம் பார்க்கக்கூடிய நேரம் இது இல்லை.. விமல் அட்வைஸ்

சென்னை : ஜாதி, மதம் பார்க்கக்கூடிய நேரம் இது இல்லை என்று நடிகர் விமல் கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recommended Video

வைரஸ் உங்கள் நண்பன் | V-CONNECT | FILMIBEAT TAMIL

நடிகர் விமல் கொரோனா தொற்றை பரவ விடாமல் இருக்க தன் ஊரில் சுகாதார துப்பரவு பணியாட்களுடன் இணைந்து தெருத் தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்து வருகிறார். மேலும், இவர், கொரோனா வைரஸ் குறித்து வெளியிட்டுள்ள காணோளியில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கட்டாயம் மீண்டு வருவோம் தைரியமாக இருங்கள் விழிப்புடன் இருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார் .

Actor vimal corona awareness video

கொரோனாவுக்கு எதிராக ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது . இந்த நேரத்தை விடுமுறை என்று யாரும் நினைத்து விடக் கூடாது. இந்த 21 நாளும் மிக முக்கியமானது அரசின் கட்டுபாட்டை பெரிய அளவில் நாம் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் .

மேலும் நாம் அனைத்து இடத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அப்போது தான் கொரோனா பரவலை சரியான அளவில் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார். மேலும் இந்த நேரத்தில் ஆடம்பர சமையல் வேண்டாம், மிகவும் எளிமையாக எது கிடைக்கிறதோ அந்த காய் கறிகளை வாங்கி சமையுங்கள் என்று கூறியுள்ளார்.

Actor vimal corona awareness video

மேலும் எனது கிராமத்தில் இளைஞர்கள் ஊரடங்கை மதிக்காமல், இது வாங்க வேண்டும், அது வாங்க வேண்டும் என்று கூறி ஊர் சுற்றி வந்தார்கள். அவர்களிடம் என்ன என்ன பொருள் வாங்க வேண்டுமோ அவை அனைத்தும் ஒரே நேரத்தில் வாங்கி வைத்து கொள்ளுங்கள் என்றும் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பியதாக வைத்ததாக விமல் கூறியுள்ளார்.

Actor vimal corona awareness video

இந்த நேரத்தில் தடையின்றி நாம் இயங்க நமக்காக உழைத்து கொண்டிருக்கும் அரசு, மருத்துவர்கள் , துப்பரவு தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார் விமல் .

இந்த மோசமான சூழ்நிலையில், அதுவும் இந்த இக்கட்டான நேரத்தில் யாரும் ஜாதி, மதம் பேதம் பார்க்க வேண்டாம் , இவன் ஏழை , இவன் பணக்காரன் என்று நினைக்க வேண்டாம், ஏற்றத் தாழ்வு பார்க்கக்கூடிய நேரம் இது இல்லை என்று கேட்டுகொண்டுள்ளார். இந்த காணோளியை பார்த்த விமலின் ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X