Actor Vimal: விமலுக்கு ஜோடியாக இணைந்த இரு நாயகிகள்.. மீண்டும் ஃபார்மில் நடிகர்!

சென்னை: நடிகர் விமல் களவாணி, வாகை சூட வா உள்ளிட்ட படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர். குறிப்பாக கிராமத்து கெட்டப்பில் அதிகமான படங்களில் நடித்து ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக வெற்றி நடைபோட்டவர் விமல். ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விலங்கு வெப் தொடர் இவருக்கு மீண்டும் கைக்கொடுத்துள்ளது.

விலங்கு வெப் தொடர்மூலம் மீண்டும் தன்னுடைய ரீ-என்ட்ரியை ஸ்ட்ராங்காக்கியுள்ளார் விமல். இந்நிலையில் அடுத்தடுத்து வெப் தொடர்கள் மற்றும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். அடுத்ததாக மகா சேனா என்ற படத்திலும் இவர் கமிட்டாகி உள்ளார்.

Vimal Web series tamil cinema

நடிகர் விமல்: நடிகர் விமல் நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிகராக. ஹீரோவாக தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். கடந்த 2009ம் ஆண்டில் வெளியான பசங்க படம் மூலம் தமிழ் சினிமாவில் சிறப்பான என்ட்ரி கொடுத்த விமலுக்கு அடுத்தடுத்து வெளியான களவாணி, வாகை சூட வா உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து வெற்றி படங்களாக அமைந்தன. இந்நிலையில் விமலுக்கு சில காலங்கள் பட வாய்ப்புகள் குறைந்து காணப்பட்டன. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விலங்கு வெப் தொடர் மூலம் மீண்டும் தனது ரீ-என்ட்ரியை தமிழில் துவங்கியுள்ளார் விமல்.

விலங்கு வெப் தொடர்: விலங்கு வெப் தொடர் மூலம் வரவேற்பும் தொடர்ந்து படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வருகிறார் விமல். அடுத்ததாக விமல், சிருஷ்டி மற்றும் யோகி பாபு ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் மகாசேனா என்ற படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. கூடலூர் அருகே உள்ள சந்தன மலைப்பகுதியில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இதன் பூஜையில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய விமல், வயநாடு சம்பவம் குறித்து அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்துள்ளார்.

விமலுக்கு ஜோடியாக இரு நாயகிகள்: இந்நிலையில் அடுத்ததாக விமல் புதிய வெப் தொடர் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். என்கிட்ட மோதாதே என்ற படத்தை இயக்கிய ராமு செல்லப்பா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த வெப் தொடரில் விமலுக்கு ஜோடியாக திவ்யா துரைசாமி மற்றும் பிக் பாஸ் பாவனி என இரண்டு நாயகிகள் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த வெப் தொடரின் ஷூட்டிங் முற்றிலுமாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விரைவில் இந்த தொடர் ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

மீண்டும் ஆக்ஷனில் விமல்: தன்னுடைய இயல்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர் விமல். மிகப்பெரிய சூப்பர்ஹிட் ஹீரோவாக இவர் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்கு தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விலங்கு வெப் தொடர் இவருக்கு மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. இதையடுத்து மீண்டும் ஆக்ஷனில் இறங்கியுள்ளார் விமல். அடுத்தடுத்த படங்கள், வெப் தொடர்கள் என மிகவும் பிசியாகியுள்ளார். இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள வெப் தொடரில் இவருக்கு ஜோடியாக 2 நாயகிகள் இணைந்துள்ளது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. மீண்டும் களவாணி விமலை பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் உள்ளனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X