twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா கிருமியே ஓடு.. களத்தில் இறங்கிய நடிகர் விமல்.. தெருத் தெருவாக கிருமி நாசினி தெளித்தார்!

    |

    திருச்சி: மணப்பாறை அருகே தனது சொந்த கிராமத்தில் நடிகா் விமல் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டார்

    Recommended Video

    யாரும் வெளியே வராதீங்க! கண் கலங்கிய வடிவேலு

    களவாணி, பசங்க, வாகை சூடவா, தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, களவாணி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல்.

    வருது.. வருது.. தெலுங்கு லஸ்ட் ஸ்டோரி்ஸ்.. புரோமோஷன் வேலையை இன்ஸ்டாவில் தொடங்கிய பிரபல நடிகை!வருது.. வருது.. தெலுங்கு லஸ்ட் ஸ்டோரி்ஸ்.. புரோமோஷன் வேலையை இன்ஸ்டாவில் தொடங்கிய பிரபல நடிகை!

    Actor Vimal spray disinfectants on roads to protect his village from Corona!

    சமீப காலமாக புதிய படங்கள் ஏதும் கிடைக்காமல் தவித்து வரும் நடிகர் விமல், நடிப்பில் கடைசியாக வெளியான களவாணி 2 படமும் படுதோல்வியை சந்தித்தது.

    கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்தாகி உள்ள நிலையில், சொந்த ஊரில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகர் விமல்.

    இந்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் நடிகா் விமல் சனிக்கிழமை நண்பகல் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டார்.

    மணப்பாறை ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் சனிக்கிழமை நண்பகல் கைத் தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவந்தது. முன்னதாக, தனது சொந்த ஊரான பன்னாங்கொம்புக்கு வந்திருந்த நடிகா் விமல், கிராமத் தெருக்களில் கைத் தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

    இந்நிகழ்ச்சியின்போது, அதிமுக திருச்சி புறநகா் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவா் மகேஷ், ஊராட்சி நிர்வாகத்தினர் உடன் இருந்தனா்.

    English summary
    Actor Vimal sprayed disinfectants to secure his own village from not getting affected by Corona virus yesterday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X