Actor Vishal: மிஷ்கினின் குழந்தையை தத்தெடுத்த விஷால்.. துப்பறிவாளன் 2 குறித்து அறிவிப்பு!
சென்னை: நடிகர் விஷால் அடுத்தடுத்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். செல்லமே படத்தில் துவங்கிய அவரது நடிப்புப் பயணம் 25 ஆண்டுகளை கடந்துள்ளது. முன்னதாக நடிகர் அர்ஜுனுடன் உதவி இயக்குனராக வேதம் உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்து தன்னுடைய கேரியரை துவங்கினார் விஷால். தொடர்ந்து அர்ஜூன் உள்ளிட்டவர்களின்ஆலோசனையின் படி நடிக்க தொடங்கினார். செல்லமே படத்தில் ஹீரோவாக நடிக்கத் துவங்கிய விஷால் நடிப்பில் கடந்த ஆண்டில் மார்க் ஆண்டனி படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ரத்னம் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனிடையே விஷாலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தின் வேலைகளை தான் துவங்கி உள்ளதாகவும் வரும் மே மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளதாகவும் அவர் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோவில் அவர் தனது அப்பா, நடிகர் அர்ஜூன் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மிஷ்கினின் குழந்தையை தான் தத்து எடுத்துள்ளதாகவும் அந்த குழந்தையை சிறப்பாக கரை சேர்ப்பேன் என்றும் விஷால் தன்னுடைய வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஷால்: நடிகர் விஷால் உதவி இயக்குனராக தன்னுடைய கேரியரை தமிழில் துவங்கினார். நடிகர் அர்ஜுனிடம் வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். இந்நிலையில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவரது தந்தை ஜிகே ரெட்டி பிரபல தயாரிப்பாளர். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை இவர் தயாரித்துள்ளார். இந்நிலையில் செல்லமே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் வாய்ப்பு விஷாலுக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இவரது கனவு இயக்குனராவது தான் என்ற போதிலும் இயக்குனராக எப்போது வேண்டுமானாலும் ஆகலாம் என்று அர்ஜூன் இவருக்கு முன்னதாக ஆலோசனை வழங்கியுள்ளார்.
நடிகராக 25 ஆண்டுகள்: செல்லமே படத்தை தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, அவன் இவன், பாண்டியநாடு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார். தற்போது ஹரி இயக்கத்தின் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. அதிரடி ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் விஷாலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஷால் வீடியோ: அதில் தன்னுடைய 25 ஆண்டு கால கனவு தற்போது நனவாகியுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் என்னவாக வேண்டும் என்று யோசித்து திரைத்துறைக்கு வந்தேனோ தற்போது அது நனவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் ஒரு டைரக்டர் ஆக வேண்டும் என்று தன்னுடைய தந்தையிடம் கேட்டதாகவும் அவர்தான் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக தன்னை இணைத்து விட்டதாகவும் விஷால் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தன்னுடைய பாதையில் நடிகராக மாறியதாகவும் இத்தனை ஆண்டு காலம் ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் தான் நடிகனாக தொடர்ந்து வருவதாகவும் அதற்கு ரசிகர்களுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
துப்பறிவாளன் 2 படம்: தனக்கு இயக்குனராக தொடர்ந்து ஆசை இருந்த போதிலும் நடிகனாக தொடர்ந்து வந்த தன்னுடைய பயணத்தை டிஸ்டர்ப் செய்யக்கூடாது என்பதற்காக தான் அந்த கனவை ஒத்தி வைத்ததாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய டைரக்டர் கனவு நனவாகும் தருணம் தற்போது வந்துள்ளதாகவும் துப்பறிவாளன் 2 படத்திற்காக தான் லொகேஷன் பார்ப்பதற்காக தற்போது லண்டன் செல்ல உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளா.ர் துப்பறிவாளன் 2 படத்திற்கான வேலைகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் மே மாதத்தில் இருந்து இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விஷால் உற்சாகம்: இயக்குனராக ரசிகர்கள் முன்னால் நின்று பேசிக் கொண்டிருப்பது தனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதாகவும் விஷால் தெரிவித்துள்ளார். ஒரு விஷயத்தை சாதிக்க வேண்டும் என்ற கனவு இருந்தால் எத்தனை ஆண்டுகள் கழித்தும் அதை சாதிக்கும் வாய்ப்புகள் நமக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தருணத்தில் தன்னுடைய தந்தை, நடிகர் அர்ஜுனுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அர்ஜுனின் பெயரை தான் காப்பாற்றுவேன் என்றும் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் மிஷ்கினுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
மிஷ்கினின் குழந்தையை தத்தெடுத்த விஷால்: மிஷ்கினின் குழந்தையை தான் தத்து எடுத்துக் கொள்வதாகவும் அந்த குழந்தையை மிகச் சிறப்பாக கரை சேர்ப்பேன் என்றும் விஷால் மேலும் தெரிவித்துள்ளார். முன்னதாக துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் இயக்கவிருந்த நிலையில் இந்தப் படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்தப் படத்தை தானே இயக்கவுள்ளதாக விஷால் கூறியிருந்தார். இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தின் சூட்டிங் உள்ளிட்டவற்றை அவர் வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











