Actor Vishal: விஜய் பாணியை கையிலெடுத்த விஷால்.. சைக்கிளில் வந்து வாக்குப்பதிவு!

சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் இன்றைய தினம் மக்களவைக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கி நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவில் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் திரளாக பங்கேற்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய், இந்தமுறை காரில் வந்து தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, கார்த்தி, வெற்றிமாறன், பா ரஞ்சித் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பிற்பகல் 1 மணிநேர நிலவரப்படி தமிழகத்தில் 40.05 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷாலும் சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.

Actor Vishal casted his vote by driving cycle

லோக்சபா தேர்தல் 2024: தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் இன்றைய தினம் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய இந்த வாக்குப்பதிவில் திரைத்துறை பிரபலங்கள், பொதுமக்கள் என திரளாக சென்று தங்களது தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குகளை பதிவு செய்தனர். பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 40.05% வாக்குகள் பதிவாகியிருந்தன. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்டவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விஷால் வாக்குப்பதிவு: இதனிடையே நடிகர் விஷாலும் சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். கருப்பு நிற டி-ஷர்ட்டில் சைக்கிள் ஓட்டியபடி வந்த விஷால் தன்னுடைய வாக்கினை பதிவு செய்திருந்தார். அவரது டி-ஷர்ட்டில் Be The Change என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. அவர் சைக்கிள் ஓட்டியபடி வாக்களிக்க வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தன. தன்னுடைய அரசியல் என்ட்ரி குறித்து அறிவித்துள்ள விஷால், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் பாணியில் விஷால்: கடந்த 2021ம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்திருந்தார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையுயர்வை குறிக்கும் வகையில் அவர் சைக்கிளில் வந்தாரா என்ற விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் விஜய் தரப்பு இதை மறுத்தது. இந்நிலையில் இன்றைய தினம் விஜய் எந்த வாகனத்தில் வந்து தன்னுடைய வாக்கினை பதிவு செய்வார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவர் காரில் வந்தே தன்னுடைய வாக்கினை பதிவு செய்திருந்தார். இந்நிலையில் விஜய்யை ஃபாலோ செய்யும்வகையில் விஷால் சைக்கிளில் வந்து வாக்களித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தலில் என்ட்ரி: வரும் 2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலின் வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயரும் இருக்கும் என்று தன்னுடைய பேட்டியொன்றில் விஷால் தெரிவித்துள்ளார். முதலில் தனியாக வந்து தான் தன்னை நிரூபிக்க வேண்டும் என்றும் பின்னர் கூட்டணி குறித்து முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அரசியல் கட்சி துவங்கவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். தான் அரசியலுக்கு வரப்போவது குறித்து வெளிப்படையாக சொல்வதற்கு காரணம், தான் எப்போதும் எதையும் மூடி மறைத்ததில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X