அடுத்தடுத்த தோல்வி... கோட்டைவிட்ட விஷால்... அடுத்த பிளான் என்ன ?
சென்னை : பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த விஷாலின் வீரமே வாகை சூடும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
தரமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விஷாலின் சமீபத்திய திரைப்படங்கள் தோல்வியை தழுவி வருகின்றன.
இதனால், படங்களின் தொடர் தோல்விக்கான காரணம் குறித்து விஷால் ஆராய்ந்து வருகிறார்.

நடிகர் விஷால்
தமிழ் சினிமாவின் இளம் தலைமுறை நாயக நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் விஷால். இவரின் வாட்ட சாட்டமான உடல் அமைப்பும், உயரமும் ஆக்ஷன் படங்களில், சண்டைக் காட்சிகளுக்கு பக்காவாக பொருந்தி இருந்ததால் விஷால் நடித்த பலத் திரைப்படங்கள் அக்ஷன் திரைப்படங்களாகவே இருக்கும்.

ஹிட் திரைப்படங்கள்
செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் நடிகரான விஷால், சண்டக்கோழி, தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், அந்தப் படத்தில் முதல் பாடலில் சேலை கட்டிக்கொண்டு பெண் வேடத்தில் முழுப் பாடலிலும் அதிரடி நடனமாடியிருப்பார். பின் பாண்டியநாடு, மருது, துப்பறிவாளன் என மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

தோல்வியை தழுவின
ஹிட் திரைப்படங்களை வரிசையாக கொடுத்து வந்த விஷாலின் திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகின்றன. சண்டக்கோழி வெற்றியைத் தொடர்ந்து சண்டக்கோழி 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை அதேபோல, அயோக்யா, அக்ஷன், சக்ரா, எனிமி தற்போது வெளியாகி உள்ள வீரமே வாகை சூடும் திரைப்படமும் தோல்வியைத் தழுவி உள்ளது.

வெற்றி பெறவில்லை
அயோக்யா திரைப்படத்தில் விஷால் ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். மேலும், அந்த திரைப்படத்தின் கதைக்களமும் நன்றாக இருக்கும் இருப்பினும் ஏன் அந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது என்று தெரியவில்லை. அதேபோல, எனிமி திரைப்படமும் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படம் தான் ஆனால், அந்த திரைப்படமும் வெற்றி பெறவில்லை.

விட்ட இடத்தை பிடிக்க
நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஷால் எந்த இடத்தில் கோட்டைவிடுகிறார் என்று தெரியவில்லை. ஆக்ஷன், காதல், சுவாரசியக் கதை என அனைத்தும் இருந்தும் படத்தின் தோல்விக்கு காரணம் என்ன என்பதை விஷால் ஆராய்த்து வருகிறார். விஷாலின் அடுத்த பிளான் லத்தி மற்றும் துப்பறிவாளன் 2 தான். விட்ட இடத்தை இந்த திரைப்படங்களின் மூலம் மீண்டும் கொண்டுவர பக்காவாக பிளான் போட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











