விஷால் மருத்துவமனையில் அனுமதி..திடீரென ஏற்பட்ட விபத்து!
சென்னை : மார்க் ஆண்டனி படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஷால் நடிப்பில் கடைசியாக எனிமி, வீரமே வாகை சூடும் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது.
விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணா, நந்தா ஆகியோருடன் இணைந்து ரமணா புரொடக்ஷன்ஸ் பேனரில் லத்தி என்ற படத்தை தயாரித்து வருகின்றனர். அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் விஷாலின் முதல் பேன் இந்தியா படமாக இதுவாகும்.

மார்க் ஆண்டனி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் மார்க் ஆண்டனி. எனிமி படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில் விஷால் எஸ்.ஜே. சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்கள். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நாயகி ரிது வர்மா நாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

காலில் காயம்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பாடலும் ஆக்ஷனும் சேர்ந்த காட்சியை படக்குழுவினர் படமாக்கி வந்தனர். நேற்று நடந்த படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சியில் பங்கேற்ற போது நடிகர் விஷாலுக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இப்போது ஓய்வு எடுத்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இதனால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

லத்தி படப்பிடிப்பின் போது
கடந்த மாதம் 'லத்தி' படத்தின் ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பில் கைதி ஒருவரை ஜீப்பில் ஏற்றி கொண்டு விஷால் செல்கிறார். அப்போது 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் விஷாலை சுற்றிகொண்டு கை, கால், உடம்பில் தாக்குவது போல காட்சி படமாக்கப்பட்டு வந்தது. இந்த சண்டைக் காட்சியில் எதிர்பாராத விதமாக காலில் அடிப்பட்டது.

கேரளாவில் சிகிச்சை
அதே போல கடந்த ஜனவரி மாதமும் விஷால் கையில் காயம் ஏற்பட்டது. இதனால், லத்தி படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் ரத்தானது. பிறகு கேரளாவுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தற்போது மீண்டும் படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அவரை நலம் விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











