விஷாலின் 'புதிய முயற்சி' அரசியல் கனவுக்கு கைகொடுக்குமா!
விஷால் தொகுத்து வழங்கப்போகும் நிகழ்ச்சியின் புரமோ வெளியாகியுள்ளது
Recommended Video

சென்னை: நடிகர் விஷால் தொகுத்து வழங்கப்போகும் நிகழ்ச்சியின் புரமோ வெளியாகியுள்ளது.
நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களைக் கொண்டுள்ள விஷால் மக்கள் நல இயக்கம் தொடங்கி சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் புதிய அவதாரமாக தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். அன்பை விதைப்போமா என விஷால் கேட்கும் புரமோ சமீபத்தில் வெளியானது.
"நாம் ஒருவர்" என்ற இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் சமூகத்திற்கு சேவையாற்றும் விதமாக மக்களுக்கு உதவும் நிகழ்ச்சியாகும்.
தற்போது வெளியாகியுள்ள புரமோவில், நடிகர் கார்த்தி இருக்கிறார். ஒருத்தர் நினைத்தால் ஒருத்தருடைய வாழ்க்கையை மாற்ற முடியும். நீ யாருடைய வாழ்க்கையை மாத்த போறங்குறத பாத்தே ஆகனும்.. என்று விஷால் சொன்னதும், மின்சார பாதிப்புக்கு ஆளான ஒரு இளைஞரை தூக்கி வருகிறார்கள்.
['அவனுக்கு வலின்னா என்னன்னு தெரியாது'.... நடுங்க வைக்கும் 'ராட்சசன்'! விமர்சனம்]
அவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விளக்குகிறார். அதை கேட்கும் விஷால் "இந்த கை உனக்கொரு கை கொடுக்கும்" என கார்த்தியைப் பார்த்து சொல்கிறார். "சன் நாம் ஒருவர்" இது வெறும் நிகழ்ச்சி அல்ல முயற்சி என பஞ்ச் பேசி முடிக்கிறார் விஷால்.
இந்த நிகழ்ச்சி சன் டிவியில் ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications