Actor Vishal: லோகேஷுடன் மீண்டும் இணைவீர்களா.. விஷால் என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: நடிகர் விஷால் அடுத்தடுத்து ரத்னம் படத்திற்கான பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார். படத்திற்கான பத்திரியாளர் சந்திப்பு உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. படம் இன்னும் சில தினங்களில் தமிழ் மற்றும் தெலுங்கில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டவர்களுடன் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனா.
இயக்குநர் ஹரி -விஷால் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ளது ரத்னம். முன்னதாக தாமிரபரணி, பூஜை படங்கள் இவர்களது கூட்டணியில் வெளியானது. தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷால் நடிப்பில் ரிலீசாகவுள்ள 34வது படமாகவும் ரத்னம் படம் உள்ளது. படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை மிரட்டியுள்ளது.

நடிகர் விஷால்: நடிகர் விஷால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவருக்கு அடுத்தடுத்த படங்கள் கைக்கொடுக்காத நிலையில் கடந்த ஆண்டில் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து நடித்திருந்த மார்க் ஆண்டனி படம் மிகச்சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்து மாஸ் காட்டியிருந்தார் விஷால். படம் டைம் டிராவலை மையமாக கொண்டு வெளியாகியிருந்தது. விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா, அடுத்தடுத்த கெட்டப்புகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். படம் சூப்பர்டூப்பர் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஷால்.
ரத்னம் படம்: விஷாலின் 34வது படமாக உருவாகியுள்ளது ரத்னம் படம். ஹரி -விஷால் காம்பினேஷனில் தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து மூன்றாவது படமாக ரத்னம் படம் உருவாகியுள்ளது. படம் வரும் 26ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது. படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்த பிரமோஷன்களில் விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
லியோ படம் குறித்து விஷால்: படம்குறித்த பல்வேறு சுவாரஸ்யங்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்த விஷாலிடம், லியோ படம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால், முதலில் இந்த கேரக்டர்கள் அண்ணன் -தம்பியாக இருந்ததாகவும் தான் அந்த கேரக்டரை செய்ய முடியாத சூழலில்தான் சித்தப்பாவாக மாற்றப்பட்டு, அந்த கேரக்டரை நடிகர் அர்ஜூன் செய்ததாகவும் விஷால் கூறியுள்ளார். எதிர்காலத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணைவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த விஷால், இதுகுறித்து தெரியவில்லை என்று பதிலளித்துள்ளார்.
அரசியல் பிரவேசம் குறித்து விஷால்: தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்து விஷாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவரது அரசியல் பிரவேசம் குறித்து பதிலளித்த விஷால், தான் கண்டிப்பாக அரசியலில் என்ட்ரி கொடுக்கப்போவதாகவும் நான் வரப்போறேன், வருவேன், அவர் சொன்னாதான் வருவேன், வந்தாலும் வருவேன் என்பது போல தான் சொல்லப் போவதில்லை என்றும் கண்டிப்பாக வருவேன் என்றும் விஷால் உறுதியாக தெரிவித்துள்ளார். அவர் இப்படி பேசியுள்ளது பிரபல நடிகரை சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











