Vishal: இன்னும் 4 மாசத்துல பத்திரிக்கையோடு வரேன்.. விஷாலுக்கு டும் டும் டும்.. அவரே சொல்லிட்டாரே!

சென்னை: இந்த ஆண்டு தொடங்கிய போது தமிழ் சினிமாவில் மிகவும் பேசு பொருளானவர் என்றால் அது விஷால் தான். இவரது மத கஜ ராஜா படத்தின் புரோமோஷனுக்காக கலந்து கொண்டபோது, இவரது நடவடிக்கைகள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக, இவரது கைகள் மிகவும் நடுங்கியதாலும், பேசுவதற்கே மிகவும் சிரமப் பட்டதாலுமே பலரும் அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நடிகர் விஷால் தனது திருமணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். இவர் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான போது, நடிகர் சங்கத்திற்கு என தனி கட்டிடம் கட்டிவிட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன் என அறிவித்தார். அதேபோல் நடிகர் ஆர்யாவும் அறிவித்தார். ஆனால் ஆர்யா, கடந்த 2019ஆம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை உள்ளது.

Actor Vishal Opens About His Marriage Fans Getting Happy

விஷால்: இந்நிலையில்தான் பலரும் விஷால் எப்போதுதான் திருமணம் செய்து கொள்வார் என்ற கேள்வியை முன் வைத்து வந்தனர். மேலும் நடிகர் சங்க கட்டிடத்தைக் கூட பின்னர் கட்டிக் கொள்ளலாம். ரொம்பவும் வயசு ஆவதற்கு முன்னர் கல்யாணத்தை செய்யச் சொல்லுங்க எனக் கூறுபவர்களும் உள்ளார்கள் இப்படியான நிலையில்தான் நடிகர் விஷால் தான் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Actor Vishal Opens About His Marriage Fans Getting Happy

திருமணம்: அதாவது அவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, " கார்த்தி பார்த்துட்டு இருக்கான். இன்னும் நான்கு மாசத்துல நடிகர் சங்கம் கட்டிடம் திறப்பு விழா இருக்கும். அதற்கான வேலையில் கார்த்தி ரொம்பவும் தீவிரமா இறங்கியிருக்கான். அதற்கு அப்புறம் எல்லாம் நல்லதா நடக்கும். நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா பத்திரிக்கையோட சீக்கிரமே வரேன். நடிகர் சங்க கட்டிடத்தை நாங்கள் திரையுலகின் கொண்டாட்டங்கள் நிறைந்த ஒரு இடமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். நாள்தோறும் நடிகர் சங்கத்தில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கும். முதல் நாள் நாசர் சார் அவரது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் என்றால், மறுநாள் பசுபதி சார் விருமாண்டி படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்து கொள்வார். அதைப் பார்க்க திரைத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிட்டு வருகிறோம்" என பேசியுள்ளார்.

சிக்ஸ் பேக்ஸ்: நடிகர் விஷாலே நடிகர் சங்க கட்டிடம் குறித்தும், அவரது திருமணம் குறித்தும் ஓபனாக பேசி விட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். மேலும் அவரிடம் தமிழ் சினிமாவில் முதலில் சிக்ஸ் பேக் வைத்தது யார் என்ற பேச்சு ஓடிக்கொண்டு உள்ளது. நடிகர் சிவக்குமார் அவரது மகன் சூர்யாதான் தமிழில் முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்தார் என்று கூறுகிறார். நீங்கள் சத்யன் படத்தில் வைத்தீர்களே, யார்தான் முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்தார்கள் என கேள்வி எழுப்பியதற்கு, " முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்தவர் நடிகர் தனுஷ். அவர்தான் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் சிக்ஸ் பேக் வைத்தார். அதன் பின்னர்தான் நான் சத்யன் படத்திலும் மத கஜ ராஜா படத்திலும் சிக்ஸ் பேக் வைத்தேன்" எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X