Actor Vishal: லண்டன் செல்லும் நடிகர் விஷால்.. அட இதுதான் விஷயமா?

சென்னை: நடிகர் விஷாலின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான மார்க் ஆண்டனி அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. தொடர்ந்து ஃபிளாப்களை கொடுத்துவந்த விஷாலுக்கு இந்தப்படம் ஆசுவாசத்தை கொடுத்துள்ளது. இதே சூட்டுடன் தற்போது இயக்குநர் ஹரியுடன் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 26ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

ரத்னம் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் அவரது அடுத்தப்படம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் சூட்டிங் துவங்கப்பட்டு இடையில் நின்ற துப்பறிவாளன் 2 படத்தின் வேலைகளை தற்போது விஷால் துவங்கியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி நடந்த நிலையில், மிஷ்கின் -விஷால் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் பாதியிலேயே நின்றது. இந்தப் படத்தை தானே இயக்கவுள்ளதாக விஷால் கூறியிருந்த நிலையில் தற்போது படத்தின் அடுத்தக்கட்ட வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

Actor Vishal plans to visit London for Thupparivalan 2 location hunt

நடிகர் விஷால்: நடிகர் விஷால் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியானது மார்க் ஆண்டனி. இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் டைம் டிராவலை மையமாக கொண்டு வெளியாகி மிகச்சிறப்பான வெற்றியை பெற்றது. படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யாவின் நடி,பபு பரவலாக வரவேற்பை பெற்றது. படம் வசூலிலும் மாஸ் காட்டியது. தொடர்ந்து விஷாலின் படங்கள் ஃப்ளாப் ஆகிவந்த நிலையில் இந்தப் படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஷால்.

ரத்னம் படம்: அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகயுள்ள ரத்னம் படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோ போன்றவை மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் ஏப்ரல் 26ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துள்ளார் விஷால். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் விஷாலின் அடுத்தப்படம் குறித்த கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும்வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போஸ்டர் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஷால் பகிர்ந்திருந்தார்.

விஷால் லண்டன் பயணம்: இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகளுக்காக தற்போது விஷால் லண்டன் பயணப்பட உள்ளார். இந்தப் படத்தின் லொகேஷன்களை பார்ப்பதற்காக அவர் நாளை மறுதினம் பிப்ரவரி 1ம் தேதி லண்டனுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து சில வாரங்களில் படத்தின் சூட்டிங்கை அவர் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான துப்பறிவாளன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

துப்பறிவாளன் 2 படம்: இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை மிஷ்கின் இயக்க, முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இணைந்து சூட்டிங் துவங்கப்பட்டது. படத்தின் சூட்டிங் லண்டனில் நடந்துவந்த நிலையில், மிஷ்கின் மற்றும் விஷாலுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படத்தை விஷால் தயாரித்துவந்த நிலையில், படத்திலிருந்து மிஷ்கின் நீக்கப்பட்டார். இதையடுத்து இந்தப் படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளதாக விஷால் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் வேலைகளை அவர் துவங்கியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X