Actor Vishal: வெளிநாட்டில் இளம்பெண்ணுடன் விஷால்.. அட என்ன இப்படி பயந்து ஓடுறாரு!

சென்னை: நடிகர் விஷால் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். சமீப காலங்களாக அவரது படங்கள் அனைத்தும் ஃபிளாப் ஆன நிலையில் சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி வெற்றிப்படமாக மாறியுள்ளது. டைம் டிராவலிங்கை மையமாக கொண்ட இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விஷால் நடித்திருந்தார். அவருடன் எஸ்ஜே சூர்யாவும் இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் இணைந்துள்ளார் விஷால். ரத்னம் என்று இந்தப் படத்திற்கு டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து இந்தப் படத்தில் ஹரியுடன் இணைந்துள்ளார் விஷால். படத்தில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் கவுதம் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு ஆகியோரும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Actor Vishal spotted with young girl in Newyork

நடிகர் விஷால்: நடிகர் விஷால் நடிப்பில் தொடர்ந்து படங்கள் ஃபிளாப்பான நிலையில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் படம் சிறப்பாக கைக்கொடுத்துள்ள நிலையில் அடுத்ததாக அஜித் படத்தை அவர் இயக்கவுள்ளார். இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் ரத்னம் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கேள்விகளை எழுப்பும் விஷால் திருமணம்: 40 வயதை கடந்துள்ள நடிகர் விஷால் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். இதையொட்டி ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அவரிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். உதவி இயக்குநராக சினிமாவில் என்ட்ரி கொடுத்த விஷால் பிரபல தயாரிப்பாளரின் மகன் என்ற அடையாளத்தையும் கொண்டுள்ளார். பல சிறப்பான படங்களில் நடித்துவரும் விஷால் நடிப்பில் சண்டக்கோழி, செல்லமே போன்ற படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றவை. தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாகவே நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் விஷால்.

Actor Vishal spotted with young girl in Newyork

இளம்பெண்ணுடன் விஷால்: இந்நிலையில் விஷாலின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. விஷால் நியூயார்க்கில் இளம்பெண் ஒருவருடன் நடந்து செல்வது போல அந்த வீடியோவில் காணப்படுகிறது. அவரை சிலர் விடியோ எடுக்க முயன்று விஷால் என்று கூப்பிட, உடனடியாக அவர் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு ஓடுவதாகவும் காணப்படுகிறது. தொடர்ந்து விஷாலின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகிவரும் சூழலில் தற்போது இளம்பெண் ஒருவருடன் விஷால் காணப்படுவது ரசிகர்களிடையே கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

விஷால் திருமணம்?: முன்னதாக லட்சுமி மேனன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்ட விஷாலுக்கும் தெலுங்கு நடிகை அனிஷா என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த திருமணம் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. முன்னதாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்தபின்புதான் தன்னுடைய திருமணம் நடக்கும் என்றும் விஷால் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இளம்பெண் ஒருவருடன் அவர் நியூயார்க்கில் சுற்றித்திரியும் வீடியோ வெளியாகியுள்ளது. அவரைத்தான் விஷால் திருமணம் செய்யப் போகிறாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X