புனித் ராஜ்குமார் உதவிய 1800 மாணவர்களின் கல்வி செலவை ஏற்ற விஷால்.. எனிமி பட விழாவில் அறிவிப்பு!
சென்னை: நடிகர் புனித் ராஜ்குமாரால் கல்வி உதவி பெற்று வந்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
46 வயதான புனித் ராஜ்குமாருக்கு அஷ்வினி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் புனித் ராஜ்குமார் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மரணமடைந்தார்.
ஆறு மாத குழந்தை உயிர் பிழைக்க நீங்கள் மனது வைத்தால் உதவ முடியும்

மாணவர்களை படிக்க வைத்தார்
தான் உயிருடன் இருக்கும் போது 1800 மாணவர்களின் கல்வி செலவை ஏற்று அவர்களை படிக்க வைத்து வந்தார். மரணமடைந்த பிறகு தனது 2 கண்களையும் தானம் செய்தார் நடிகர் புனித் ராஜ்குமார். புனித் ராஜ்குமாரின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கண்ணீர் அஞ்சலி
புனித் ராஜ்குமாரின் மரணத்தை அறிந்து அதிர்ச்சியில் மூன்று ரசிகர்கள் உயிரிழந்தனர். அவரது உடலுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அம்மாநில ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் திரைத்துறை நட்சத்திரங்களும் ரசிகர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

புனித்தின் பணியை தொடரும் விஷால்
இந்நிலையில் நடிகர் விஷால் புனித் ராஜ்குமாரால் கல்வி உதவிப்பெற்று வந்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை தானே ஏற்பதாக அறிவித்துள்ளார். விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

கல்விச் செலவை ஏற்கிறேன்..
இதில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் போட்டோவை வைத்து நடிகர்கள் ஆர்யா, விஷால் உட்பட படக்குழுவினர் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து பேசிய நடிகர் விஷல், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் படிக்க வைத்த 1800 மாணவர்களின் கல்வி செலவை இனி தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

ரசிகர்கள் வரவேற்பு
விஷால் மேடையில் பேசும் இந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. விஷாலின் இந்த அறிவிப்பை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.
#puneethrajkumar sir about #vishal anna... very good friend of #vishal anna #ripPuneethrajkumar sir VishalKOfficial PuneethRajkumar pic.twitter.com/gPNilel1jD
— vishal anna_ forever ♥ (teluguvishalfan) October 29, 2021
நான் உங்களின் ரசிகன்
புனித் ராஜ்குமாரும் நடிகர் விஷாலுக்கும் இடையே நல்ல நட்பு உறவு இருந்தது. ஒரு மேடை நிகழ்ச்சியில் விஷாலை சந்தித்த புனித் ராஜ்குமார், நான் உங்களின் கட்டுடலுக்கும் உங்களின் சண்டைக் காட்சிக்கும் பெரும் ரசிகன் என கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











