என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!

சென்னை : என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க, ஆட்சியில் உள்ளவர்கள் மக்களுக்கு நல்லது செய்துவிட்டால், நான் நடித்துவிட்டு சென்றுவிடுவோம், நீங்க ஏன் மற்றவர்களுக்கு வழி கொடுக்குறீங்க, எல்லாரும் நல்லது செய்யத்தானே அரசியலுக்கு வரீங்க என்று நடிகர் விஷால் அந்த பேட்டியில் தனது அரசியல் வருகை குறித்து பேசி உள்ளார்.

வரும் 2026ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவேன், அதை அடிக்கடி சொல்லிக்கொண்டு இருக்க முடியாது, வரும் போது கண்டிப்பா வருவேன். வந்தாலும், இந்த கட்சியுடன் கூட்டணி, இந்த கட்சியுடன் இத்தனை சீட்டுகள் ஒதுக்கீடு என்பதை யோசிக்க கூடாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று யோசித்தால் அதற்காக மட்டும் தான் அரசியல் கட்சி தொடங்கி செயல்பட வேண்டும்.

Actor Vishal talks about joining politics in 2026

நல்லது செய்ங்க: நான் 26ல் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இருக்கிறேன், என்னை அரசியலுக்கு வரவிடாதிருங்கள், ஆட்சியில் உள்ளவர்கள் மக்களுக்கு நல்லது செய்துவிட்டால் நாங்கள் நடித்துவிட்டு சென்றுவிடுவோம். நீங்க ஏன் மற்றவர்களுக்கு வழி கொடுக்குறீங்க, எல்லாரும் நல்லது செய்யத்தானே அரசியலுக்கு வரீங்க அதை செய்ங்க. நீங்க நல்லது செய்யும் போது, நாங்க ஏன் தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வரப்போகிறோம்.

Actor Vishal talks about joining politics in 2026

அடிப்படை வசதி தேவை: கிராமப்புறங்களில் மக்களுக்கான நலதிட்டங்கள் முழுமையாக கிடைப்பது இல்லை. இதை நான் ஒரு வாக்காளராக சமூக சேவகரா சொல்கிறேன். அதை திமுக, அதிமுக செயல்பாடு என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அடிப்படை வசதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மக்களின் அடிப்படை வசதியில் தான். மக்கள் பேன்ஸ் கார் கேட்கவில்லை, இரண்டு அடுக்கு மாடியில் நீச்சல் குளம் கேட்கவில்லை, குழந்தைகள் லண்டனில் படிக்க வேண்டும் என்று கேட்கவில்லை அடிப்படை வசதியைத்தான் கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் மாற்றம் என்பது நிச்சயம் தேவைப்படுகிறது. மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தால், என்னைப் போன்ற வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு எங்கள் தொழிலை பார்த்துக் கொண்டு சென்று விடுவோம். கட்சி தொடங்குவதில் ஆர்வம் காட்ட மாட்டோம் என்றார்.

விஜயகாந்த் பெயர்: மேலும், நடிகர் சங்க கட்டடத்திற்கான பூஜை இன்று காலை போடப்பட்டது. கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டிடம் நிச்சயம் வந்துவிடும். கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து பொதுக்குழு தான் முடிவு எடுக்க வேண்டும், நான் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது. நடிகர் சங்கத்தில் முக்கிய நிர்வாகிகள் உள்ளனர் அவர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

ரத்னம்: இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.இப்டம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் 26ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும், விஷால் உடன் , சமுத்திரக்கனி, யோகிபாபு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X