கேரள வாராஹி பஞ்சமி தேவி கோவிலில் விஷால் சாமி தரிசனம்.. தடை நீங்க சிறப்பு பூஜை செய்து வழிபாடு!

சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வாராஹி பஞ்சமி தேவி கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்து சிறப்பு பூஜை செய்தார். படப்பிடிப்பிற்காக கேரளா சென்றிருந்த விஷால், அந்த கோவிலை கேள்விப்பட்டு அந்த கோவிலுக்கு சென்றுள்ளார்.

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற பிடிவாதமாக இருந்த நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை காதலித்து வருவதாகவும், நடிகர் சங்கம் கட்டிட பணிகள் முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து, விஷாலின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எளிமையாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டனர்.

நடிகர் விஷால்: நிச்சயத்தை தொடர்ந்து விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடிகர் சங்க கட்டிடத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. ஜனவரி மாதம் நடிகர் சங்க கட்டிடத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், அநேகமாக ஜனவரி மாதத்தில் விஷாலுக்கு திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vishal Temple

சிறப்பு பூஜை: இந்நிலையில் படப்பிடிப்பிற்காக கேரளா சென்று இருந்த நடிகர் விஷால், திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது, திருவனந்தபுரத்தை அடுத்த அனயாராவில் உள்ள வாராஹி பஞ்சமி கோவிலை பற்றி கேள்விபட்டு அங்கு சாமி தரிசனம் செய்தார். அந்த கோவில் ஆகம விதிப்படி சட்டை இல்லாமல் தான் வரவேண்டும் என்பதால், சட்டை இல்லாமல் பட்டு துண்டை அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்துள்ளார். கோவில் விஷால், "கை வட்டக குருதி பூஜை" என்ற சிறப்பு பூஜை செய்தார். மாவேலிக்கரை பிரசாந்த் நம்பூதிரி தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. "கை வட்டக குருதி பூஜை" என்பது கேரள கோவில்களில் செய்யப்படும் மிகவும் சிறப்பு வாய்ந்த பூஜையாகும்.இது தீய சக்திகளை அகற்றி, தடைகளை நீக்கி வாழ்க்கையில் நன்மைகளை கொண்டுவர உதவும். முக்கியமாக எதிர்மறை சக்திகளையும், தடைகளையும் நீக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த பூஜையை தொடர்ந்து நடிகர் விஷாலுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X