Vishal: இதோ ஆரம்பிச்சிட்டாருல்ல.. ரம்ஜானுக்கு வீடியோ வெளியிட்ட விஷால்.. இப்போ என்ன பண்றாரு பாருங்க!

சென்னை: நடிகர் விஷால், எஸ்ஜே சூர்யா கூட்டணியில் கடந்த ஆண்டில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது மார்க் ஆண்டனி. இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி அதிரடி கிளப்பியுள்ளன.

இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தின் வேலைகளை துவங்கியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட விஷால், லண்டன் உள்ளிட்ட இடங்களில் படத்தின் லொகேஷனை பார்க்கும் பணியை மேற்கொண்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த பிரசன்னா உள்ளிட்ட சிலர் இரண்டாவது பாகத்திலும் இணைந்துள்ளனர்.

Actor Vishal wishes for Ramzan with prayer video

நடிகர் விஷால்: நடிகர் விஷால் அடுத்தடுத்து ரசிகர்களை கவரும் வகையில் படங்களை கொடுத்து வருகிறார். அவரது சில படங்கள் தொடர்ந்து அவருக்கு சரியாக கை கொடுக்காத சூழலில் கடந்த ஆண்டில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த சூழலில் படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா மிகப்பெரிய மிரட்டலான நடிப்பை கொடுத்திருந்தார். படம் வசூல் ரீதியாகவும் மிரட்டியது. இந்நிலையில் அடுத்ததாக ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஷால்.

ரத்னம் படம்: ரத்னம் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளார். இந்த படம் 26ம் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்க திட்டமிட்டுள்ளார் விஷால். மிஸ்கின் இயக்கத்தில் துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்தநிலையில் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். தொடர்ந்து இந்த படத்தை தானே இயக்கப் போவதாக விஷால் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பணிகளை துவங்கியுள்ளார்.

துப்பறிவாளன் 2 லொகேஷன்: இந்த படத்திற்காக அசர்பைஜான், லண்டன் போன்ற பகுதிகளில் லொகேஷனை பார்த்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் விஷால். முதல் பாகத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த பிரசன்னா உள்ளிட்ட சிலரும் இந்த இரண்டாவது பாகத்திலும் இணைந்துள்ளனர். மற்ற நடிகர்கள் நடிகைகளை விஷால் தானே ஆடிஷன் வைத்து தேர்வு செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது, எப்போதுமே அனைத்து மதங்களையும் ஒரே மாதிரி பார்க்கும் தன்மை உடையவர் விஷால். சில மாதங்களுக்கு முன்பு இவரது சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியான சூழலில் அதில் சாப்பிடுவதற்கு முன்னதாக இந்து, கிறிஸ்டியன் மற்றும் முஸ்லிம் மதங்களின் வழிபாட்டை மேற்கொண்டுவிட்டு சாப்பிடத் துவங்கினார்.

தொழுகையுடன் ரம்ஜான் வாழ்த்து: இந்த வீடியோ பல்வேறு விமர்சனங்களை அவருக்கு பெற்று தந்தது. இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள விஷால், தான் தொழுகை மேற்கொள்ளும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து அவர் இன்றைய தினத்தில் மக்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் மற்றும் பாசிட்டிவிட்டியையும் அல்லாஹ் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பிரியாணி காத்திருப்பதாகவும் அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X