மேடையிலேயே மயங்கி விழுந்த விஷால்.. அவர் உடம்புக்கு என்னதான் ஆச்சு?.. மேனேஜர் சொல்வது என்ன?
சென்னை: விஷாலின் நடிப்பில் கடைசியாக மத கஜ ராஜா திரைப்படம் வெளியானது. 12 வருடங்களுக்கு முன்பே ரிலீஸாகவிருந்த படம் சில பிரச்னைகளால் இந்த வருடம்தான் வெளியானது. சுந்தர். சி இயக்கத்தில் ரிலீஸான அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக சுந்தர். சி இயக்கத்திலும், முத்தையா இயக்கத்திலும் ஒரு படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விழுப்புரத்தில் நடந்த மிஸ் திருநங்கைகள் நிகழ்வில் கலந்துகொண்ட விஷால் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் விஷால். ஆனால் கால சூழ்நிலை காரணமாக செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது; அடுத்ததாக சண்டக்கோழி, தாமிரபரணி, திமிரு உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார். ஆனால் இடையில் சறுக்கிய அவர் தொடர்ந்து தோல்விகளையே கொடுத்துவந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் கடைசியாக நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. படம் மெகா ஹிட்டானது.
ஹரியுடன் கூட்டணி வைத்த விஷால்: இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்தார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே இந்தக் கூட்டணி மூன்றாவது முறையும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் படம் அந்த எதிர்பார்ப்பை ஓரளவுக்குத்தான் பூர்த்தி செய்தது.

மத கஜ ராஜா: இப்படிப்பட்ட நிலைமையில்தான் இந்த வருட பொங்கலுக்கு மத கஜ ராஜா ரிலீஸானது. சுந்தர். சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டு ரிலீஸாகாமல் இருந்தது. ரிலீஸாவதில் இருந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டதால் இத்தனை வருடங்கள் கழித்து ரிலீஸானது. ரொம்ப லேட் ரிலீஸ் எனவே படம் கனெக்ட் ஆகுமா என்ற சந்தேகம் ஒட்டுமொத்த திரைத்துறைக்குமே இருந்தது. ஆனால் அந்த சந்தேகத்தை ஓபனிங் நாளிலேயே திரைப்படமானது அடித்து நொறுக்கிவிட்டது. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
நடுங்கிய விஷால்: இதற்கிடையே படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் ஒன்று நடைபெற்றது. அதில் விஷால் கலந்துகொண்டார். அப்போது கைகள் நடுங்கியபடி அவர் இருந்ததை கண்டு பலரும் அதிர்ச்சியானார்கள். ஒருதரப்பினரோ விஷாலுக்கு அந்த நோய், இந்த நோய் என்றெல்லாம் பேச தொடங்கினார்கள். ஆனால் அவருக்கு வைரஸ் காய்ச்சல் மட்டும்தான் என்று விளக்கமளிக்கப்பட்டது. சில நாட்களிலேயே விஷால் இயல்பு நிலைமைக்கு திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மயங்கிய விஷால்: இந்நிலையில் விழுப்புரத்தில் நடந்த மிஸ் திருநங்கைகள் என்ற நிகழ்ச்சியில் விஷால் கலந்துகொண்டார். அப்போது மேடையில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். விஷால் மயக்கம் போட்டதும் அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள். உடனடியாக முதலுதவி அழிக்கப்பட்டதை அடுத்து அவர் கண் விழித்தார். விஷால் இப்படி மயங்கி விழுந்ததும் அதற்கு என்ன காரணமாக இருக்கும்; உண்மையில் அவருக்கு உடலில் ஏதேனும் பிரச்னையோ என்று வழக்கம்போல் பலர் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
மேனேஜர் விளக்கம்: சூழல் இப்படி இருக்க இதுதொடர்பாக விஷாலின் மேனேஜர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த விளக்கத்தில், 'சரியாக சாப்பிடாதது, கூட்டம் அதிகம் கூடியதன் காரணமாகத்தான் அவர் மயங்கி விழுந்தார். மருத்துவரிடம் சென்று வந்த பிறகு நலமோடு இருக்கிறார்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனால் விஷாலின் ரசிகரக்ள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











