நீளும் பட்டியல்... நடிகர் விஷ்ணு விஷாலும் கொரோனாவால் பாதிப்பு

சென்னை : தொடர்ந்து திரைப்பிரபலங்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

நடிகர் சத்யராஜ், த்ரிஷா, மீனா என இந்த பட்டியல் நீண்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கடந்த மாதத்தில் இருந்தே திரையுலக பிரபலங்கள் கொரோனாவிற்கு அதிகமாக பாதிக்கப்படும் செய்திகள் அடிபட்டு வருகின்றன. கோலிவுட்டில் சத்யராஜ், மீனா, த்ரிஷா ஆகியோர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திரையுலக பிரபலங்கள் பாதிப்பு

திரையுலக பிரபலங்கள் பாதிப்பு

நடிகர் மகேஷ் பாபு, இயக்குநர் பிரியதர்ஷன் உள்ளிட்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த 2022ம் ஆண்டு தனக்கு கொரோனா பாதிப்புடன் துவங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விஷ்ணு விஷாலுக்கு கொரோனா பாதிப்பு

விஷ்ணு விஷாலுக்கு கொரோனா பாதிப்பு

இதையடுத்து தான் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக தனக்கு தொண்டை வலி, மூக்கடைப்பு, காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை

குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை

மேலும் கடந்த ஒரு வாரத்தில் தன்னுடன் நெருங்கி பழகியவர்கள் தங்களை சோதனை செய்துக் கொள்ளவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரவி தேஜாவுடன் படம்

ரவி தேஜாவுடன் படம்

விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் படம் பிப்ரவரியில் வெளியாகவுள்ளது. இதையடுத்து மோகன்தாஸ் என்ற படத்தில் நடித்து தயாரித்தும் வருகிறார். இந்தப் படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படத்திற்காக ரவி தேஜாவுடன் இணையவுள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் விஷ்ணு விஷால்.

ரிலீசாகும் எஃப்ஐஆர் படம்

ரிலீசாகும் எஃப்ஐஆர் படம்

ராட்சசன் படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து தற்போது அவரது எப்ஐஆர் படம் ரிலீசாக உள்ளது. அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி அவர் பிசியான நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வரும் சூழலில் தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X